புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 மார்., 2014

ரணில் ஆட்சி செய்திருந்தால் இன்று இரு அரசாங்கங்கள் இருந்திருக்கும்

ரணில் விக்ரமசிங்ஹ இதுவரை நாட்டை ஆட்சி செய்தால் பிரபாகரன் இன்றும் யுத்தம் புரிவார். இன்றேல் நாட்டில் இரு அரசாங்கங்கள் இருக்கும்.
அவ்வாறு இருந்திருந்தால் நாம் இன்று யாழ்ப்பாணம் போகவும் பாஸ்போர்ட் தேவையாகி இருக்கும்.

இவ்வாறு சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். தென்மாகாண சபை தேர்தல் வேட்பாளர் கீதா குமாரசிங்கவை ஆதரித்து இந்துருவ வரகாமுல்ல பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். அண்மையில் அரசாங்கம் 55,000 பட்டதாரிகளுக்கு வேலை வழங்கியது. நிதி அமைச்சர் காலத்தில் 50,000 தொழில் வாய்ப்புக்களை வழங்கினேன். தற்போது தொழில் இல்லாத பட்டதாரிகள் இல்லை,
அமெரிக்கா இவ்வாறு தொழில் வழங்குவதில்லை ரணிலின் காலத்தில் 04 லட்சம் அரச ஊழியர்களை வீடுகளுக்கு அனுப்ப வரவு செலவுத் திட்டத்தில் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அன்று 10 இலட்சம் அரச ஊழியர்களே இருந்தனர்,
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதை விட இம்முறை வீட்டில் இருப்பது நன்று. ஐ. தே. க. ஜே. வீ. பி. தீப்பந்தம் இதில் எவருக்கும் எதிர்காலம் இல்லை. வேட்பாளர் கீதா குமாரசி’கவின் பணிகள் பாராட்டத்தக்கவை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்