புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

எச்சரிக்கை கனடா டொரோண்டோ நகர மோசமான காலநிலை அடுத்த 24 மணி நேரத்தில் 
இந்த வருடம் வழக்கத்திற்கும் மாறாக ஆட்டிப் படைத்து வரும் குளிருக்குப் பின்னர் டொரோண்டோ வாசிகளுக்கு மீண்டும் தீவிர குளிர்காற்று
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 36 மணி நேரங்களுக்கு நாடி நரம்புகளை உறைய வைக்கும் குளிர்காற்றுடன் பணியும் விழக் கூடும் என்பதால் பாதுகாப்பாக இருக்கும் படி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காற்றின் ஈரப்பதம் -20 to -30 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக் கூடும் என்பதால் -35 க்கும் குறைவான வெப்ப நிலையே நிலவும் என  சுற்றுச்சூழல் கனடா அறிவித்துள்ளது. உறைவிடமற்றவர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான உறைவிடங்களில் தஞ்சமடையுமாறும் அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.
தீவிர குளிர் எச்சரிக்கை காரணமாக
• இரவு முழுவதும் மக்கள் போக்குவரத்துக்கு வசதியாக மாநகரில் பேரூந்துகள் அதிகமாக்கப்பட்டுள்ளன.
• உறைவிடங்களை நாடுவோர் பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் தானியங்கி TTC டோக்கன்களை பெற்றுக் கொண்டு மாநகர பேரூந்து வசதிகளை பயன்படுத்தி நகர் முழுவதும், அமைக்கபப்ட்டுள்ள உறைவிடங்களில் தஞ்சம் புகலாம்.
• மேலும் வானிலை தொடர்பான விபரங்களை அறிந்து கொள்வதற்கென தனியாக கட்டுப்பாட்டு அறையும் உண்டாக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகலில் வெப்பநிலை -13 டிகிரி செல்சியசாக இருக்கும்எனவும் வானிலை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

ad

ad