புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

வடமாகாண சபை உறுப்பினர்கள்லிங்கநாதன்,ரவிகரன்  மாமடு , பழம்பாசி மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மாமடு, பழம்பாசி கிராமங்களுக்கு விஜயம் செய்த வடமாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன் மற்றும் லிங்கநாதன் ஆகியோர் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தனர்.

வீதிகள் புனரமைப்பு தொடர்பில் மாமடு பழம்பாசி மக்கள் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அங்கு சென்ற அவர்கள், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்தனர்.

பிரதேச மக்கள் மாமடு சந்தியிலிருந்து பழம்பாசி சந்தி வரையிலான சுமார் 2 1/2 கிலோ மீற்றர் தூரமான பாதையின் சீர்கேட்டை வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு சுட்டிக் காட்டினர்.

இப்பாதையின் ஊடாக பழம்பாசி, சாளம்பை, ஒதியமலை, பெரியகுளம், பழைய மாமடு வீதி, மாமடு சந்தி ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 350 குடும்பங்களுக்கு மேற்பட்டோர் பயன்படுத்துவதையும் சுகயீனமானவர்களை கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்கள், பாடசாலை மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பஸ் போக்குவரத்து முன்பு இடம்பெற்றதையும் தற்போது உள்ள பாதையின் நிலைமையையும் விளக்கினர்.

அது மட்டுமின்றி, இக்கிராமங்களின் பெரும்பாலான தேவைகளை தீர்ப்பதற்கும் இப்பாதை ஊடாகவே செல்ல வேண்டி உள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

மக்களின் குறைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு அதன் ஊடாக அக்குறைகளை  தீர்ப்பதற்கு உதவுவதாகவும் மாகாண சபை உறுப்பினர்கள் உறுதியளித்தனர்.






ad

ad