புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் இன்றுடன் முடிவடைகிறது. நாளை முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தமிழகத்தில், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யாத
நிலையிலும், 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தி.மு.க.வில் விருப்ப மனு வாங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் தி.மு.க.வில் வேட்பாளர் நேர்காணல் நடந்து வருகிறது. இறுதி நாளான இன்று, வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, புதுச்சேரி ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது.


அதனைத் தொடர்ந்து, நாளை தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தி.மு.க. கூட்டணியில், தி.மு.க. 36 தொகுதிகளில் (புதுச்சேரி உள்பட) போட்டியிடும் என தெரிகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், மனிதநேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதியும் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. மீதமுள்ள, 36 தொகுதிகளிலும் தி.மு.க. களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் அன்றே, யார் யாருக்கு எந்த தொகுதிகள் என்று இறுதி செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

ad

ad