புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

ஜெனிவாவிபிரேரணை வலுவானதாக அமையும். இந்தியாவும் ஆதரவு வழங்கும்  மாவை 
ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜெனிவா அமர்வு தொடர்பாக எழுப்பப்பட்ட
கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக மூன்றாவது தடவையாகவும் ஜெனிவாவில் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது. இந்தப் பிரேரணை இம்முறை வலுவானதாகவே அமையுமென எதிர்பார்க்கினறோம்.அதே நேரத்தில் இந்தப் பிரேரணைக்கு ஆதரவு திரட்டுவதற்காக கூட்டமைப்பின் குழுவொன்று ஜெனிவா செல்லவிருக்கின்றது. இதில் யார், எப்பொது செல்வார்கள் என்பது தொடர்பில் ஆராய்ந்த பின்னரே முடிவெடுத்து அறிவிப்போம்.
குறிப்பாக இதில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்ற நாடுகள் மற்றும் நடுநிலையாக இருக்கின்ற நாடுகளிடமும் உண்மை நிலையை விளக்கி எமக்கான ஆதரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு முயல்வோம். இம்முறை இதனை இந்தியா உட்பட பல நாடுகள் ஆதரிக்குமென்ற நம்பிக்கையும் எமக்கிருக்கின்றது. இதற்கு மேலதிகமாக கூட்டமைப்பு ஜெனிவா செல்வதுடன் புலம் பெயர் அமைப்புக்களும் பல நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருவதாகவும் மாவை சேனாதிராசா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மேல் மாகாண சபைத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முண்னனிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஜனநாயக மக்கள் முன்னணி ஆதரவு வழங்கியிருந்தது. அத்தோடு தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயற்பட்டதுடன் தற்போதும் செயற்பட்டு வருகின்றது.ஆகவே தமிழ் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
அத்தோடு இந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து வருகின்றது.இதற்குரிய காலங்கள் நேரங்கள் சரியாக வருகின்ற போது நிச்சயமாக நல்லதொரு முடிவை கூட்டமைப்பு அறிவிக்குமென்றும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
இதன்போது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் விந்தன் கனகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ad

ad