புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

1553125_470595186402769_470835597_o


கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு மார்ச் மாதம் முதலாம் நாள் அனைத்துலக மகளிர் நாள்  மாநாடு 
கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு மார்ச் மாதம் முதலாம் நாள் அனைத்துலக மகளிர் நாள் நிகழ்வையும் மாநாட்டையும் காலை 9:30 முதல் மாலை 5:00மணி வரை 2035 Kennedy வீதியில் அமைந்துள்ள Delta Hotel இல் வெகு சிறப்பாக நடாத்தியது
.சர்வதேச பெண்கள் தினத்தினை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வானது
பல்லின பெண்கள் அமைப்புகளும் கலந்து கொண்டு எம்மினப் பெண்களின் சிக்கல் குறித்து அறிந்து கொள்ள முன்வரும் சிறப்பான மாநாடாகவும் புலம்பெயர்ந்த மண்ணில் முதன் முதலாக தமிழ் பெண்களால் நடத்தப்படும் தனித்துவமான ஒரு மாநாடாகவும் அமைந்தது இங்கே குறிப்பிடத்தக்கதாகும் .
காலை 9.30 மணிக்கு நிகழ்வின் விருந்தினர் பதிவுடனும் காலை சிற்றூண்டியுடனும் அனைவரும் மாநாட்டுக்கு தயாராகினர். குறித்த நேரத்திற்க்கு ஆரம்பமான இந்த நிகழ்வு மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததை நிகழ்வின் இறுதிவரை காணக்கூடியதாக இருந்தது . பல்லின சமூக அமைப்பினர்,அரசியலாளர்கள், ஊடகத்துறையினர், பெண்கள், ஆண்கள், இளையோர், முதியோர் என அனைவரும் நிகழ்வில்ஆரம்பம் முதல் இறுதிவரை ஆர்வத்தோடு கலந்துகொண்டனர்.
காலை 10.30 மணிக்கு அகவணக்கத்துடன் மாநாடு ஆரம்பமானது. அனைவரையும் வரவேற்று மாநாட்டின் நோக்கம் மற்றும் தாயகத்தில் எம்மின பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் அதை எவ்வாறு நாம் சர்வதேச உலகிற்க்கு எடுத்து செல்லவேண்டும் போன்ற விடயங்களை கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் அதன் பொறுப்பாளர் திருமதி கவிதா செந்தில் அவர்கள்

தமிழில் தெளிவாக குறிப்பிட்டார். அவற்றை ஆங்கிலத்தில் கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பின் உறுப்பினர் பிரசன்யா ஞானி அவர்கள் எடுத்துரைத்தார். தமிழீழதில் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வரும் தமிழீழ பெண்களின் அவலங்கள் குறித்த விழிப்புணர்வை பல்லின பெண்கள் மட்டத்திற்கு எடுத்துரைப்பதோடு அவர்களுக்கு மறுக்கப்பட்ட நீதியையும் கனடிய பல்லின பெண்களின் இன்னல்கள் மற்றும் உலகப் பெண்களின் சிக்கல்கள் இன்றைய பெண்கள் எதிர்நோக்கும் தடைகள் சிக்கல்கள் மற்றும் உலகப் பெண்களின் சாதனைகள் என பன்முகப் பார்வையோடு மாநாடு ஆரம்பமானது.
பல்லின மக்களுக்கும் நிகழ்வின் அனைத்து கருத்துக்களும் சென்று சேரும் வண்ணம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மூலம் நிகழ்த்தியமை நிகழ்வை மேலு
ம் வலுவாக்கியது .
நிகழ்வை திறம்பட தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிமூலம் தொகுத்து வழங்கியதோடு மட்டுமல்லாமல் பல ஆரோக்கியமான கருத்துக்களை அமைப்பின் உறுப்பினர் தர்சிகா
செல்வசிவம் அவர்கள் வழங்கியிருந்தார் .
முதலாவது அமர்வு காலை 11.00 மணிக்கு மண்டபம்நிறைந்த மக்களுடன் ஆரம்பமானது. 3 குழு உறுப்பினர்களை கொண்டதாக அமைந்த இந்த கருத்தரங்கில்
1.ஜெசிக்கா சந்ரசேகர், 2.ஜெனிஸ், 3. சாரா போஹாரி அவர்களும் கலந்து கொண்டனர்.
ஜெனிஸ் அவர்கள் முதலில் கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தினருக்கு தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தார். கனடிய பெண்கள் மற்றும் பழங்குடி மக்கள் குறிப்பாக பெண்கள் தொடர்பிலும் தனது கருத்துக்களை முன்வைத்தார். இனவெறி, நிறவெறி மற்றும் கலாச்சார படுகொலைகளுக்கு மற்றும் வன்முறைகளை எப்படி பெண்கள் எதிகொள்கின்றனர் மற்றும் போராடுகின்றனர் போன்ற கருத்துக்களை தெரிவித்தார் .
அடுத்து பேசிய ஜெசிக்கா முழுமையாக தாயாக தேசத்தில் குறிப்பாக வடகிழக்கு பகுதியில் தமிழீழ பெண்கள் இன்று எதிர்நோக்கும் அனைத்து கொடுமைகளையும் நேரில் சென்று பார்த்த சாட்சியமாக எம்மின மக்களின் வாக்குமூலமாக குறிப்பிட்டார்.
கொடிய யுத்தத்தின் வடுக்களை சுமந்து இன்று தமது உயிர்களை மட்டும் தக்கவைத்துக் கொண்டு தப்பி பிழைத்த அந்த மக்கள் எப்படியான திட்டமிட்ட இனஅழிப்பிற்க்கு உள்ளக்கப்படுள்ளனர் என்பதனை விரிவாக குறிபிட்டார். குறிப்பாக யுத்தத்தின் கோரம் எப்படி பெண்களையும் குழந்தைகளையும் மிகவும் பாதித்துள்ளமை என்பது தொடர்பில் ஒரு சிறப்பான பதிவை பல்லின அமைப்பினர் முன் தெளிவுபடுத்தியிருந்தார் .
கணவனை இழந்த பெண்கள் படும் அவலங்கள்,பெண் குழந்தைகள் படும் அவலங்கள், தாயக தேசத்தின் ராணுவ ஆக்கிரமிப்பு, பாலியல் வன்கொடுமைகள், கட்டாய கருத்தடை, காணமல் போதல், 2009 இன் பின் முகாம்களில் இருந்து எண்ணிக்கையற்று தனிமைப்படுததப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளோர் போன்ற இலங்கை அரசின் பல இனஅழிப்பு நடவடிக்கைகளை பட்டியலிட்டதோடு நீதி மறுக்கப்பட்டு வாழும் இனமாக தொடரும் தாயாக மக்களின் குறிப்பாக பெண்களின் அவலங்களை விவரித்தார் .ஏதிலிகளாக இருக்கும் பெண்கள் குழந்தைகளையும் கிணற்றில் போட்டு தாமும் இறக்கும் கொடுமைகளை சொன்னபொழுது அங்கெ குழுமியிருந்த பல்லின அமைப்பினரின் விழியோரம் வழிந்த கண்ணீர் எமது வலிகளை சொல்லியது .
மூன்றவதாக பேசிய சாரா — புலம்பெயர் தளத்திலும் தங்கள் தாய்நாட்டிலும் குறிப்பாக தெற்காசிய பெண்கள் எதிர்நோக்கும் பலவேறன சமூக , குடும்ப பிரச்சனைகள் குறித்து விரிவாகப் பேசினார். குறிப்பாக கணவரால் துன்புறுத்தப்படல், சீதனக் கொடுமை , சமூகம் பெண்களுக்கு கொடுக்கும் பலவேறு பிரச்சனைகள் சவால்கள் பேசப்பட்டன . இதற்க்கான ஒரே தீர்வு பெண்கள் விழிப்படைதல் ஒன்றே எனவும் சுட்டிக்கட்டப்பட்டது. புலம்பெயர்ந்து வாழும் பெண்கள் பல சவால்களோடு மொழி பிரச்சனைகளை எதிகொள்ளவேண்டிய ஒரு சூழல் பல இன்னல்களை தோற்றுவிப்பதகவும் தெரிவிக்கப்பட்டது.
3 குழு உறுப்பினர்களின் கருத்து பகிர்வின் பின் அங்கெ குழுமியிருந்த மக்களுக்கான கேள்வி நேரம் வழங்கப்பட்டு அவர்களுக்கான பதில்களும் வழங்கப்பட்டன .
பலர் வயது பால் வேறுபாடின்றி கருத்து பகிர்வில் ஆர்வத்தோடு கலந்து கொண்டமையும் தாயக பெண்கள் தொடர்பில் பல ஆரோக்கியமான கருத்துக்களை பரிமாறியதையும் காணமுடிந்தது.
.
மதியம் 12.30 மணிக்கு முதல் அமர்வு நிறைவடைந்தது.
அதனை தொடர்ந்து 12.30-1.30 மணிவரை மதிய உணவு பரிமாறப்பட்டது .
மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமான இரண்டாம் அமர்வு முற்று முழுதாக தாயாக பெண்கள் குறித்த கருத்தரங்காக அமைந்து .
இந்த அமர்வில் இரண்டு இளம் தமிழ் பெண்கள் அமெரிக்காவிலிருந்து சிறப்பு விருந்தினர்களாக அழைக்கபட்டிருந்தனர் .
1. தாஷா மனோரஞ்சன்
2. நிம்மி கௌரிநாதன்
தாஷா அவர்கள் 2009 பின் தமிழ் ஈழத்தில் எமது மக்களின் நிலையை பகிர்ந்து கொண்டதோடு அம்மக்களின் இன்றைய நிலை குறித்தும், அவர்களுக்கு நாம் செய்யவேண்டிய வேலைதிட்டங்கள் குறித்தும் .குறிப்பிட்ட அவர், அன்று ஒரு உன்னத நிலையிலிருந்த எங்கள் உறவுகள் இன்று வீதியோரங்களில் யாருமற்ற ஏதிலிகளாக வீசப்பட்டுள்ளனர் நிலை குறித்தும் விளக்கமளித்தார். குறிப்பாக இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் தமிழ் பெண்கள் மற்றும் முன்னால் போராளிகள் என்ற ரீதியில் சமூகத்தில் இருந்து புறக்கணிக்கப்படும் பெண்கள் பல்லாயிரக் கணக்கானோர் சொல்லொனா துயரை அனுபவிக்கின்றனர் என குறிப்பிட்டார். இராணுவ ஆக்கிரமிப்பு ,பாலியல் பலாத்காரம் , மற்றும் ஐ. நா வின் நிபுனர்கள் குழு அறிக்கை போன்ற தெளிவாக சொல்லும் பல விடயங்கள் குறித்தும் விளக்கினார் . ஒரு இனத்தின் அடையாளங்களை திட்டமிட்ட வகையில் அழித்தல் இனப்படுகொலை என்றும், இலங்கை அரசின் நல்லிணக்க நடவடிக்கை தோற்றுப்போன ஓன்று எனவும் எனவே உலக நாடுகள் இலங்கைக்கு உயர்வான இடத்தினை வழங்காமல் அங்கு நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சரியான தீர்வினை வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அடுத்துப் பேசிய சிறப்பு பேச்சாளர் நிம்மி கௌரிநாதன் அவர்கள் பல்முனை தளத்தில் புலம்பெயர் நாடுகளில் நாம் எப்படியான வேலைத்திட்டங்களை செய்ய வேண்டும் என்ற கருத்துக்களை தெளிவாக பேசினார் . பெண்கள் குறிப்பாக அரசியல் சமூகம் என அனைத்து மட்டங்களிலும் இன்று சிறப்பாக தாயாக நலனை மையப்படுத்தி பணியாற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
போருக்கு பின்னரான அனைத்து கொடுமைகளையும் விரிவாக பேசிய அவர் அங்கே பெண்களின் அவல நிலை குறித்து தெளிவுபடுத்தி பேசினார். பெண்களும் குழந்தைகளும் தற்கொலைகளும் குறித்து பேசிய அவர் இன்று உலக நாடுகளில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் இதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் கொட்டுக்கொண்டார். நிறைவாக உலகம் தருவதை நாம் பெற முடியாது , எமக்கானத்தை நாமே பெற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார் .
சிறப்பு விருந்தினர்களின் உரைகளைத் தொடர்ந்து கேள்வி நேரம் மக்களுக்கு வழங்கப்பட்டது. முதலாம் அமர்வின் கேள்வி நேர கருத்தரங்ககினைப் போல் இரண்டாவது அமர்விலும் அங்கே குழுமியிருந்த மக்கள் பலவேறு கருத்துக்களை ஆரோக்கியமாக முன்வைத்தனர் .பல்துறைசார் நிபுணர்கள் ,பல்லின மக்கள் என அனைவரும் தமது துறைசார் நிபுணத்துவத்தின் ஆளுமைகளுடன் கருத்துப்பகிர்வுகளை சிறப்பாக பதிவுசெய்தனர் . அனைத்து தளங்களிலும் பெண்களின் ஆளுமை சிறப்பாக அமைந்தமை பலரால் குறிப்பிடப்பட்டது . இவ்வாறான மாநாடுகளின் தேவை இனிவரும்காலங்களில் அவசியமென பலர் குறிப்பிட்டனர் .
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து இன்று குறிப்பாக கனடிய அனைத்துக்கட்சி பாராளமன்ற உறுப்பினர்களும் வெளிப்படையாக குறிப்பிட்ட நிகழ்வினை சுட்டிக்காட்டி இனிவரும் காலங்களில் அனைவரும் வெளிப்படையாக இலங்கை இனப்படுகொலை குறித்து பேசவேண்டிய கடப்பாடும் உறவுகளால் முன்வைக்கப்பட்டது. அத்துடன் Dr. ராஜேஷ் லோகன் அவர்களும் இந் நிகழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் மருத்துவ பிரச்சினைகள் உட்பட பல விடயங்களையும், தாயகத்தில் பெண்கள் எதிர் கொண்டிருக்கும் பிரச்சினைகளையும் எடுத்துரைத்தார்.
ஆரோக்கியமனதாக அமைந்த நிகழ்வு இனிவரும் காலங்களின செயல்பாடுகள் ஆக்கபூர்வமானதாகவும் பன்முக தளத்தில் சர்வதேச மயப்படுத்தப்பட்டு விரிவாக்கம் பெறவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது .
இந் நிகழ்வின் முக்கிய விடயமாக கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டுக் கழகதினரால் ஜெனிவா மனித உரிமை மாநாட்டிற்க்கு சமர்ப்பிக்கும் வண்ணம் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக நன்றி உரையையும் உறுதி மொழியையும் தமிழில் கனடா தமிழ்ப் பெண்கள் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் லச்சி ஸ்ரீ அவர்களும் அதை ஆங்கிலத்தில் சுருதி ஸ்ரீதரன் அவர்கள் மிகவும் நேர்த்தியாக சொல்லி நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்தனர் கனடாத் தமிழ்ப் பெண்கள் மேம்பாட்டு அமைப்பினர்.ekuruvi_ncct

ad

ad