புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

மீனம்பாக்கத்தில் ஜெயலலிதா பிரச்சாரம் : 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா முதல்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று காஞ்சீபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்
குமரவேலுக்கு ஆதரவாக ஓட்டுக்கேட்டார்.

இன்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என். ராமச்சந் திரனை ஆதரித்து மீனம்பாக்கத்தில் பிரச்சாரம் செய்கிறார்.
இதற்காக மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள ஜெயின் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடை அருகில் 100 அடி உயரத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவம் கட்–அவுட்டாக வைக்கப்பட்டுள்ளது.
மேடையின் எதிரில் பாராளுமன்ற வடிவில் பிரமாண்ட கட்–அவுட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து ஜெயின் கல்லூரி மைதானம் வரை அ.தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. டிஜிட்டல் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.
மீனம்பாக்கத்தில் பிரச்சாரம் செய்வதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மாலை 4 மணியளவில் வீட்டில் இருந்து காரில் புறப்படுகிறார். மீனம்பாக்கத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர், மேடைக்கு செல்லும் முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருதையொட்டி மீனம்பாக்கம் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. அங்கு 6000–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ad

ad