புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

சிறிலங்காவின் தவறுகளுக்கு அனைத்துலக விசாரணைக்குழு அமைப்பதே ஒரே வழி' - மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர்

சிறிலங்கா அரசாங்கம் தனது வரலாற்றுத் தவறிலிருந்து தப்பிக்காது விடுவதற்கு அனைத்துலக விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படுவது மாத்திரமே வழியாகக் காணப்படும். 
இவ்வாறு அமெரிக்காவிலிருந்து வெளியாகும் 'The New York Times' என்னும் ஊடகத்தில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் Louise Arbour* தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அதன் முழுவிபரமாவது:

2009ன் முற்பகுதியில், 40,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் போரில் அகப்பட்ட பொதுமக்கள் மிகச்சிறிய நிலப்பரப்புக்குள் சிறைப்படுத்தப்பட்டனர். இந்த மக்கள் மீது எவ்வித தயவு தாட்சண்ணியமுமின்றி எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் குற்றங்கள் தொடர்பில் எவரும் பொறுப்பளிக்க முன்வரவில்லை. சிறிலங்கா அரசாங்கம் தற்போதும் கடந்த காலத் தவறுகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்கான முயற்சிகளையே மேற்கொள்கிறது.

சிறிலங்கா அரசாங்கம் தனது வரலாற்றுத் தவறிலிருந்து தப்பிக்காது விடுவதற்கு அனைத்துலக விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படுவது மாத்திரமே வழியாகக் காணப்படும்.

திங்கட்கிழமை ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை சந்திக்கும் போது இந்த விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இது சிறிலங்காவில் நீதி மற்றும் மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கான மிகச் சிறந்த நகர்வாகக் காணப்படும். 

ad

ad