புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்: ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 32 பேர் சிறைபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்ற சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.

 புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித்தளத்தில் இருந்து நேற்று (திங்கள்கிழமை) 243 விசைப்படகுகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் நேற்று இரவு 9 மணியளவில் நடுக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ஜெகதாப்பட்டினம் மீனவர்களின் விசைப்படகுகளை சுற்றி வளைத்து, மீனவர்களைத் தாக்கியதுடன், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 32 பேரை கைது செய்தனர். மேலும் அவர் சென்ற 8 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
 இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விபரம்:
வைரக்கண்ணு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற வைரக்கண்ணு மகன் கணேசன்(45), அஞ்சப்பன் மகன் சின்னையன்(50),குஞ்;சுபாபு மகன் சம்திசன்(55), மாரிமுத்து மகன் கண்ணப்பன்(60).
பெருமாள் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற பெருமாள் மகனகள் முகிலன்(18), பிரசாத்(25), விக்னேஷ்(23), கோவிந்தராஜ் மகன் ஜெயபால்(50), இருளாண்டி மகன் சன்னியாசி(40). அஞ்சப்பன் என்பருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற அஞ்சப்பன் மகன்கள் வீரகுமார்(23), வீரதாஸ்(26), ஆண்டி மகன் சுப்பையா(50), ராஜேந்திரன் மகன் விவேக்(19). செல்லாச்சி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற பள்ளிகொண்டான் மகன் சிவபெருமாள்(55), ஆறுமுகம் மகன் முருகன்(55), தங்கராஜ் மகன் மாரியப்பன(35), செங்காநன்னி மகன் பாபு(27).
கமலநாதன் என்பருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற சாமிநாதன் மகன் பாபு(40), ஆறுமுகம் மகன் இடும்பன்(60), சிங்காரவேல் மகன் பாண்டி(30), சித்திரைச்சாமி மகன் சக்தி(25). வளர்செல்வம் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற தங்கவேல் மகன் பழணியாண்டி(55), பழணியாண்டி மகன்கள் கமலநாதன்(30), பார்த்திபன்(23), முத்து மகன் பிரபாகரன்(19).
 செல்வநாதன் என்பருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற பஞ்சவர்ணம்(60), பஞ்சவர்ணம் மகன் தமிழ்ச்செல்வன்(29), பக்கிரிச்சாமி மகன் பிரகாஷ்(26), கனகசபை மகன் செந்தில்(32). பெருமாள் மகன் ராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆறுமுகம் மகன் சதீஷ்(19), பாலமுரளி மகன் ஆறுமுகம்(40), சிவபெருமாள் மகன் ஸ்ரீராம்(19).


 இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 32 பேரையும், அவர்களின் 8 விசைப் படகுகளையும் இலங்கையில் உள்ள காங்கேசன் துறை கடற்படை தளத்திற்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்று மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.


 இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் சிறைபிடித்துச் செல்லப்பட்ட சம்பவம் மீனவர் களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad