புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

மியன்மாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
இரு நாடுகளின் தலைவர்களும் இரு நாடுகளுக்கிடையலான பல முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.

மியன்மாரின் தலைநகரான நேபிடோவில் நடைபெற்றுவரும் வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் ஏழு நாடுகளின் தலைவர்களின் கூட்டம் இடம்பெறுகிறது.
இக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த மியன்மாருக்கு விஜயம்மேற்கொண்டபோதே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
வங்காளம், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபால், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளே இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

ad

ad