புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2014

கசிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த உற்பத்தியாளர்கள் 
சாவகச்சேரி பருத்தித்துறை வீதி 1ம் ஒழுங்கை கொட்டாம்பிட்டி கிராம வாசிகளால்  மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் போதைப் பொருள்  விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்கள் இந்த சட்டவிரோத செயலை
நிறுத்துவதற்கு தானாக முன்வந்துள்ளனர்.
 
 

 
சாவகச்சேரி நகராட்சி மன்ற உறுப்பினர்அ.பாலமயூரன், கிராம சேவகர் க.கார்த்திகேஜன்,  முன்நிலையில் குறித்த பிரதேச இளைஞர்கள், யுவதிகளின் முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் 6 நபர்களும்  தமது கசிப்பு உற்பத்தியினை  நிறுத்துவதாக உறுதிமொழி வழங்கினர்.
 

 
இதன்போது இப்பகுதியில் போதைப்பொருள் உற்பத்தி, விற்பனை செய்தல் முற்றாக தவிர்க்கப்படும் என்றும் இதனை கண்காணிப்பதற்கு தம் மத்தியில் இருந்து 5 உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 
 
மேலும் இனிவரும் காலங்களில் போதைப்பொருள் தொடர்பான பிரட்சனைகள் ஏற்பாட்டின் இக் குழு கிராம சேவையாளரின்  உதியுடன் அதனை தீர்ப்பதென முடிவுசெய்யப்பட்டுள்ளது,
 

 
 
இதேவேளை குறித்த 6 நபர்களில் அடங்கியிருந்த இரு பெண்கள் தெரிவிக்கையில்- 
 
தமது வாழ்வாதார பிரச்சனைகள் காரணமாகவே இவ் தொழிலில் ஈடுபட்டதாகவும்  அதற்கான உதவிகளை வழங்கவேண்டுமென்றும்  கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த கிராம சேவகர் நகரசபை உறுப்பினர் உதவியுடன் பிள்ளைகளின் கல்வித்தேவைகளை நிறைவு செய்வதாகவும்,சமுர்த்தியில் இணைந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

ad

ad