புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2014


வடிவேலு - தெலுங்கு அமைப்பினர் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு :
திட்டமிட்டபடி ’தெனாலிராமன்’ ரிலீஸ்!



நடிகர் வடிவேலு நடித்த தெனாலிராமன் திரைப்படம் திட்டமிட்டபடி நாளை மறுதினம் திரைக்கு வருகிறது.   இப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் இந்தபடத்தை தெலுங்கு அமைப்பினருக்கு திரையிட்டுக்காட்ட மாட்டேன் என்று முரட்டு பிடிவாதம் பிடித்ததால், தெலுங்கு அமைப்பினரும் முரட்டு பிடிவாதம் பிடித்து வந்தனர்.  வடிவேலுவின் மென்மையான அணுகுமுறையால் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
நடிகர் வடிவேலு நடித்து நாளை மறுதினம் திரைக்கு வரவிருக்கிறது தெனாலிராமன் திரைப்படம்.  இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவரும் இத்திரைப் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகம் இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்திற்கு சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.   கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்தி காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று கூறி வந்தார்கள்.  நீதிமன்றத் தில் வழக்கு தொடுத்தார்கள்.  அவை தள்ளுபடி செய்யப்பட்டன.

அப்படியும் சமாதானம் ஆகாத அமைப்பினர், படத்தை எங்களூக்கு திரையிட்டுக்காட்டாமல் ரிலீஸ் செய்தால், போராட்டம் நடத்துவோம் என்று கூறினர்.   வடிவேலுவுக்கு எதிராக போராட்டம் செய்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று சீமான், பாரதிராஜா உள்பட பலர் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி, சமரசம் ஆவதே நல்லது என்று முடி வெடுத்த வடிவேலு, சென்னை ரெசிடென்சி ஓட்டலில் தெலுங்கு அமைப்பினர்களை சந்தித்து சமரச முயற்சியில் ஈடுபட்டார்.

இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.  இதையடுத்து நாளை மறுதினம் திட்டமிட்டபடி தெனாலிராமன் எந்தவித சிக்கலும் இல்லாமல் திரைக்கு வருகிறது.

இதுகுறித்து நமது நிருபர் நடிகர் வடிவேலுவிடம் பேசியபோது,  ’’உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் இந்தப்படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.   அவர்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்தபடி படத்தில் அத்தனை விசயங்களும் இருக்கும்.

படத்தில் ராஜா கேரக்டரை உயர்வாகத்தான் காட்டியிருக்கிறோம். ஆனால், தெலுங்கு அமைப்பினர் தவறாக காட்டியிருக்கிறோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.   அவர்களிடம் படத்தை பற்றி தெளிவாக விளக்கினேன்.  அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.  மேலும் அவர்களுக்கு சந்தேகம் இருப்பதால் படத்தை திரையிட்டுக்காட்ட சம்மதித்துள்ளேன்.

’யாராவது எதையாவது கொளுத்தி போட்டுடுவாங்க.  அதையெல்லாம் கண்டுக்கிடாதீங்க.  நாம எல்லாரும் அண்ணன்,தம்பியா பழகணும்’னு அவுங்க கிட்ட கேட்டுக்கிட்டேன்’’ என்றார்.

ad

ad