புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2014

தென்கொரிய கடலில் மூழ்கியது கப்பல் : 147 பேர் மீட்பு 
தென்கொரியாவின் பயணிகள் கப்பலொன்று 476 பயணிகளுடன் தென்கொரிய கடலில்  மூழ்கிகொண்டிருப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

476 பயணிகளில் 325 பேர் உயர்தர பாடசாலையின் மாணவர்கள் என்றும் 32 பணியாளர்கள் இருந்ததாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது.

கப்பலில் இருப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் 18 ஹெலிகொப்டர்களும் 34 படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது 147 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இன்ஞ்சொன்சில் இருந்து ஜேஜூ தீவு நோக்கிப் பயணித்த இந்தப் படகில் பாடசாலை மாணவர்களே அதிகளவில் பயணித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறும் பயணிகள் பாதுகாப்புடன் மீட்கப்பட வேண்டுமெனவும் தென் கொரிய ஜனாதிபதி பார்க் கியொன் ஹை பணிப்புரை விடுத்துள்ளார்.


ad

ad