புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2014

பி.ஜே.பி.யை விமர்சிக்காதது ஏன்? ஜெயலலிதாவுக்கு கி.வீரமணி கேள்வி

சென்னை திருவொற்றியூர், தம்புசெட்டித் தெரு (மண்ணடி) ஆகிய இரு இடங்களிலும் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில்,


இந்தக் கூட்டணி தான் கொள்கைக் கூட்டணி சமூக நீதிக்கான அணியாகும். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் - சிறுபான்மையினர் ஒன்றிணைந்து நிற்கும் கூட்டணியாகும். மற்ற தரப்புகளில் உள்ள அணி கொள்கை அணியல்ல - மாறாக சீட்டணி.
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஒன்றிணைந்து சமூகநீதி அணியாக கலைஞர் தலைமையில் ஒருங்கிணைந்து நிற்கிறார்கள். கருத்து வேறுபாடுகளுக்கு இந்த அணியில் இடம் இல்லை.
அ.இ.அ.தி.மு.க.வும், காங்கிரசும் தனியாக நிற்கின்றன. இன்னொரு அணி இருக்கிறது. அதில் பிஜேபி பா.ம.க., தே.மு.தி.க., மதிமுக, அய் ஜே.கே. என்ற கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன.  இவைகளிடையே கொள்கை உடன்பாடுகள் உண்டா? ஒருவர் கொள்கையை இன்னொருவர் ஏற்றுக் கொள்வார்களா?
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனியீழம் பேசுகிறார். அப்படி ஒரு கருத்தை அவர் எடுத்துச் சொன்ன போது, ஈரம் காயுமுன் பி.ஜே.பி.யின் முன்னாள் தலைவர் வெங்கையநாயுடு பதிலடி கொடுக்கிறார். தனியீழம் எங்களுக்கு உடன்பாடானதல்ல, இலங்கை இன்னொரு நாடு - அதன் இறையாண்மையில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று சொல்லி விட்டாரே!
பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் பற்றியோ தமிழக மீனவர்கள் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவே இல்லை. தமிழ்நாட்டுக்கென ஒரு தேர்தல் அறிக்கை அதற்குப் பின்னர் வெளியிட்டுள்ளது பிஜேபி. அதிலும் அந்த நிலைதான்.
மார்க்கெட்டிங் ஏஜெண்டுகள் இப்படி தமிழ்நாடு தொடர்பான எந்த உரிமைபற்றியும் பிஜேபி தேர்தல் அறிக்கையில் காணப்படாத நிலையில், அதனோடு கூட்டுச் சேர்ந்த மார்க்கெட்டிங் ஏஜெண்டுகளை நினைத்தால் வெட்கப்பட வேண்டியுள்ளது - இன்னொரு வகையில் பரிதாபமும்பட  வேண்டியுள்ளது.
பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் ராமன் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள சிறப்பு சலுகைகள் நீக்கம் குறித்து பிஜேபி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தும், பிஜேபியின் மார்க்கெட்டிங் ஏஜெண்டுகள் அதுபற்றி கேள்வி எழுப்பவில்லையே ஏன்? கொள்கையற்ற கூட்டணி என்பதற்கு இது ஒன்று போதாதா?
அ.இ.அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடுகிறதே. ஜெயலலிதா காங்கிரசைக் கடுமையாக கண்டித்துப் பேசுகிறார்; திமுகவை பற்றி வசை மாரி பொழிகிறார் ஆனால் இவர்கள் தமது கட்சி வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் பிஜேபியைப்பற்றி ஒரு வார்த்தைக் கூட விமர்சிக்கவில்லையே ஏன்?
அ.இ.அ.தி.மு.க.வுக்கும் பி.ஜே.பி.க்கும் இடையே இருக்கும் மறைமுகக் கூட்டணியைதான் இது வெளிப்படுத்துகிறது. இதுகுறித்து நாங்கள் கேள்வி எழுப்பி இருக்கிறோம்; திமுகவும் குற்றம் சுமத்தியிருந்தும் இதுவரை அம்மையார் ஏன் வாய்த் திறக்கவில்லை? மவுனம் சம்மதத்துக்கு அடையாளம் என்று தானே பொருள்?
மோடி அலை வீசுகிறது, மோடி அலை வீசுகிறது என்றார்கள். அலை ஒன்றும் வீசவில்லை; மோடிதான் வலை வீசிக் கொண்டு அலைகிறார். ஆங்காங்கே பதவிப் பசி எடுத்துக் கிடக்கிறவர்களைத் தேடி வலை வீசுகிறார். இவ்வாறு பேசினார்

ad

ad