புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2014

இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளை அழிக்க இந்திய இராணுவம் உதவி; வெளிவருகிறது புதிய தகவல் 
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இந்திய பாராளுமன்றத்திலும், ஜனாதிபதியிடமும் அனுமதி கோராமல் இந்திய படையினரை ஈடுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இது தொடாபில் டெல்லியைச் சேர்ந்த சட்டத்தரணியான ராம்சங்கர் என்பவர், இந்திய உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மனுவில் சீக்கியர் ஒருவர் இலங்கையில் 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் இடம்பெற்ற யுத்தத்தை வழி நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை நேரடியாக கண்ட சாட்சிகளும், ஆதாரங்களும் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவம், வான்படை மற்றும் கடற்படை ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவில் யுத்தம் பிரகடனம் செய்யப்படாத நிலையில், இந்திய அரசியல் அமைப்பின் படி, இந்திய படையினரை இலங்கையில் ஈடுபடுத்தியமை சட்ட விரோதமானது என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான தீர்ப்பாயம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நாளை மறுதினம் இந்திய உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
- See more at: 

ad

ad