புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2014


இலங்கையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு துஸ்பிரயோகம் செய்யப்படுகிறத
இலங்கையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்ற விடயம் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுஆங்கில பத்திரிகை ஒன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இலங்கையின் பிரபல சிங்கள பாடர்களான ரூக்காந்த மற்றும் சந்திரலேகா ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியமைக்காக 10 ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு நான்கரை வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அவர்கள் வெலிக்கடை மற்றும் மத்தறை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் அவர்கள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வாறு குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுகின்றவர்கள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பயன்படுத்தி தப்பித்துக் கொள்கின்றனர்.
தற்போதைய ஜனாதிபதி இவ்வாறு பொது மன்னிப்பை துஸ்பிரயோகம் செய்வதாக அந்த பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.

ad

ad