புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2014

ஐ.நா விசாரணைக்குழு நிபுணராக முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி 
news
ஐக்கிய நாடுகள்; மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இலங்கை தொடர்பிலான விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
 ஐக்கிய விசாரணைக்குழுவின் நிபுணர்களில் ஒருவராக முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி மார்டி அத்திசாரி நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
 
இந்தக் குழுவிற்கு ஆலோசனை வழங்கும் விசேட நிபுணர்கள் இருவர் நியமிக்கப்பட உள்ளனர். ஆலோசனை வழங்கும் நிபுணர்களில் ஒருவராக நோபள் சமாதான விருது வென்ற முன்னாள் பின்லாந்தின் ஜனாதிபதி மார்டி அத்திசாரி நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அத்திசாரி கொசோவோவிற்கான ஐக்கிய நாடுகள் பிரதிநிதியாக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நியூநிலாந்தின் முன்னாள் ஆளுனர் நாயகம் டேம் சில்வியா கட்ரைட் மற்றைய நிபுணராக கடமையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொடர்பான விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய விபரங்கள் தொடர்பில் இந்த வாரத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிற

ad

ad