புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2014




கலைஞர் கோபம்.சீனியர் மா.செ க்கள்  நம்பும் ஸ்டாலின் 


""ஹலோ தலைவரே...… சட்டம்-ஒழுங்கு நிலைமை பற்றி இந்து முன்னணித் தலைவர் ராஜகோபாலன் பேசுனப்ப, தமிழ்நாட்டில் சட்டம் இருக்குது, ஆனா அது ஒழுங்கா இல்லைன்னு சொல்லியிருக்காரு.''     

""ஊடகங்களில் வரும் செய்திகளும் அதைத் தானே காட்டுது. மீடியாக்களில் வராத செய்தி களைப் பற்றிப் பேசுவோம்ப்பா.. அதைத்தானே நம்ம நக்கீரன் வாசகர்களும் பொதுமக்களும் நம்மகிட்டே எதிர்பார்க்குறாங்க.''

""தி.மு.க.வின் நிர்வாக வசதிக்காக 65 மாவட்டங்கள் உருவாக்கப்படுவதா அறிவிப்பு வந்ததிலிருந்து தொண்டர்கள் குஷியா இருக் காங்க. மாவட்ட செயலாளர்களெல்லாம் பீதியிலே இருக்காங்க. ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், மற்ற நிர்வாகிகளெல்லாம் தங்களோட நிலைமை என்னாகும்ங்கிற பதட்டத் துல இருக்காங்க.''

""கலைஞரும் மு.க.ஸ்டாலினும் இது பற்றி ஆலோசனை நடத்திக்கிட்டி ருக்காங்களே?''

""இரண்டு பேரும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றித் தொடர்ந்து ஆலோசிக்கிறாங்க. ஆனா இந்த சந்திப்பில் வெளிப்படுற விஷயங்கள் இணக்கமாவோ வெளிப்படையாவோ இல்லையாம். மு.க.ஸ்டாலின் அப்செட்டா தெரியுறாரு. நடிகை அமலாபால்-டைரக்டர் விஜய் கல்யாண வரவேற்புக்கு ஸ்டாலின் தன் மனைவி துர்காவோடு வந்திருக்காரு. அப்ப அங்கே இருந்த திரைப்பிரபலங்களெல்லாம் எழுந்து நின்னு வணக்கம் போட்டிருக்காங்க. ஏதோ பதட்டமான யோசனையோடே இருந்த ஸ்டாலின், யாருக்கும் பதில் வணக்கம் சொல்லலை.'' 

""அந்தளவுக்கு என்ன பதட்டம்?''

""65 மாவட்டங்களா பிரிக்கிறதால இப்ப இருக்கிற மா.செக்களை மொத்தமா மாத்திடலாம்ங்கிறது கலைஞரோட கணக்கு. 6 பேர் குழு கொடுத்த பரிந்துரையிலும் இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் மா.செ.வா இருக்கிறவங்களை மாத்தலாம்னு சொல்லியிருப்ப தால அதையும் கவனத்திலே எடுத்திருக்காரு கலைஞர். அதாவது பொன்முடி, நேரு, சுப.தங்கவேலன், தூத்துக்குடி பெரியசாமி, திண்டுக்கல் பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, பொங்கலூர் பழனிச்சாமி, பழனிமாணிக் கம், கே.கே.எஸ்.எஸ்.ஆர், கருப்பசாமிபாண்டியன், சுரேஷ் ராஜன், என்.கே.கே.பி.ராஜா,  தா.மோ.அன்பரசன் இவங் களுக்கெல்லாம் மாநிலப் பொறுப்பு ஏதாவது கொடுத்து, மாவட்டத்திலிருந்து தூக்கிட லாம்னு லிஸ்ட் போட்டிருக் காராம். தன்னைப் பார்க்க இவங்க வரும்போதெல்லாம் கிண்ட லாகப் பேசுவது கலைஞரோட வழக்கம். இந்த லிஸ்ட்டில் இருக்கும் மா.செ.க்களில் பெரும்பாலானவங்க மு.க.ஸ்டாலினைப் பார்த்துட்டுத்தான் கோபாலபுரம் பக்கம் வருவாங்க. அப்படி வர்றப்ப, என்னய்யா.. நீர் கண்ட இடத்திலேயெல்லாம் விளையுற மாதிரி நடந்துக்கு றீங்கன்னு கேட்பாரு. வேட்பாளர் தேர்வின்போதே சிலருக்கு செக் வைக்க முயற்சித்தார். அதனால அப்பவே இந்த மா.செ.க்களெல்லாம் கலைஞரைப் பார்க்கும்போது ஒருவித பதட்டத்திலேதான் இருந் தாங்க.''

""மாவட்ட பிரிப்பு அறிவிப்பு வந்ததும் இந்த மா.செ.க்கள் யாராவது கலைஞரைப் போய்ப் பார்த்தாங்களாமா?''

""பொன்முடி போனப்ப, வாய்யா.. முன்னாள் மாவட்டம்னு கலைஞர் சொல்ல,  அவர் பயங்கர ஷாக்காயிட்டா ராம். தூத்துக்குடி பெரியசாமி   மகனும் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்ற வருமான ஜெகன் ஒரு அறிக்கையை கலைஞர்கிட்டே கொடுத்துட்டு, அனிதாராதாகிருஷ் ணனும் ஜெய துரையும் ஒழுங்கா வேலை செய்திருந்தா ஜெயிச் சிருக்கலாம்னு சொல்ல, டென்ஷனாயிட்டாரு. அவங்க வேலை செய்திருந்தா மட்டும் ஜெயிச்சிருக்க முடியுமா? ஜெயிக்கிற மாதிரியா உங்க அப்பாவும் நீங்களும் மாவட்டத்தை வச்சிருக்கீங்கன்னு கேட்டிருக்காரு.''

""அப்படின்னா, மாவட்ட பிரிப்பு பற்றி கலைஞர்கிட்டே மா.செ.க்கள் யாரும் வாயே திறக்கலைன்னு சொல்லு..''

""தென்சென்னை மா.செ.வான ஜெ.அன்பழகன்தான் மாவட்ட பிரிப்பு அறிவிப்பு வந்தவுடனேயே கலைஞரை சந்திச்சி, தன்னோட எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திடறதா சொல்லியிருக் காரு. அன்னைக்குத்தான் குஷ்புவும் ராஜினாமா செய்திருந்தார். அதனால கலைஞர், என்னய்யா இது மிரட்டலான்னு ஜெ. அன்பழகன்கிட்டே கேட்க, தன்னோட சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை வடசென்னை ஏரியாவுக்குட்பட்ட சென்னை கிழக்கு மாவட்டத்தில் சேர்த் திருப்பது பற்றியும், இப்படியொரு திட்டம் இருப்பது பற்றி ஒருவாரமாவே அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்கிட்ட சொல்லியும் எதுவும் நடக்கலைன்னு சொன்ன அன்பழகன், தனக்கெதிரா சதி நடக்குதுன்னு சொல்லியிருக்காரு. கலைஞ ரும் விடாமல், சதின்னா யாரு செய்றா? ஸ்டாலினை சொல்றியான்னு கேட்டிருக் காரு. அதற்கப்புறம், சேப்பாக்கம்- திரு வல்லிக்கேணி தொகுதியைத் தென்சென்னை யை ஒட்டிய சென்னை மேற்கு மாவட் டத்தில் சேர்த்து, முரசொலியில் பட்டியலை வெளியிட்டிருக்குது தலைமைக் கழகம். கலைஞர் பல மா.செக்களுக்கு பதவி கிடையாதுன்னு பட்டியல் ரெடி பண்ணியிருக்கிற மாதிரி, ஜெ.அன்பழகன் போன்றவங்க மா.செ.வா நீடிப்பதை ஸ்டாலின் விரும்பலையாம்.'' 

""ஸ்டாலின் லிஸ்ட்டில் இருந்த அன்பழகன், கலைஞரை சந்திச்சி தொகுதி யைக் காப்பாத்தியிருக்காரு. கலைஞர் லிஸ்ட்டில் உள்ள மா.செ.க்களோட மூவ் என்ன?''

""அவங்களெல்லாம் ஸ்டாலின்கிட்டே தொடர்ந்து பேசிக்கிட்டிருக்காங்க. இப்படி கொத்து புரோட்டா மாதிரி மாவட்டங்களைப் பிய்ச்சிப் பிய்ச்சிப் போட்டுட்டீங்களே, பிரிச்ச மாவட்டங்களிலாவது நாங்க சொல்றவங்களை மா.செ.வா போடுங்கன்னு சொல்லியிருக்காங்க. இதற்கிடையிலே, மா.செக்களுக்கு மட்டும்தான் பனிஷ் மெண்ட்டா, மாநில நிர்வாகி களுக்கு இல்லையாங்கிற குரல் களும் கேட்க ஆரம்பிச்சிருக்குது.''

""அது யாரு?''

""வேலூர் மா.செ. காந்தி என்ன கேட்கிறாருன்னா, மா.செ.க்கள் சரியா வேலை பார்க்கலைன்னு மாவட்டங்களைப் பிரிக்கிறீங்களே, மாநில நிர் வாகியான துரைமுருகன் வேலூரில் ஏ.சி. சண்முகத்துக்கும், அரக்கோணத்தில் மாம்பழத் துக்கும் ஓட்டுப் போடச் சொன்னதைப் பற்றி ஒன்றியச் செயலாளர்கள் புகார் கொடுத் திருக்கிறாங்களே, அப்படிப்பட்ட மாநில நிர்வாகிகள் மேலே என்ன நடவடிக்கைன்னு கேட் கிறாரு. இது புது புகைச்சலை உண்டாக்கியிருக்குது.''

""15-ந் தேதிக்குள் வேட் பாளர்களும் தேர்தல் பொறுப்பாளர்களும் தங்கள் தொகுதியில் எப்படி வேலை நடந்ததுன்னு அறிக்கை தரணும்னு உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் போட்டிருந்தாங் களே?''

""தலைவரே.. வேட்பாளர் களில் பெரும்பாலோர் அந்தந்த மா.செ.க்கள் சிபாரிசு மூலமா ஸ்டாலினால் லிஸ்ட் பண்ணப் பட்டவங்க. அந்த வேட்பாளர் கள் தங்கள் மா.செ.க்களின் விருப்பப்படிதான் அறிக்கையை ரெடி பண்ணியிருக்காங்க. புதுசா பிரிக்கப்படுற மாவட்டங்களில் எதிர்க்கோஷ்டி ஆட்கள் பதவிக்கு வந்துவிடக்கூடாதுங்கிறதுக்காக, அவங்களெல்லாம் கட்சிக்கு வேலை செய்யலைன்னும் எதிரா வேலை செய்தாங்கன்னும் வேட் பாளரோட அறிக்கையில் இடம் பெறும்படி சில பல மாவட்டங் களில் வேலைகள் நடக்குதாம். தி.மு.க.வில் என்னென்ன நடக்குதுன்னு உளவுத்துறை மூலமா ஆளுங்கட்சி உன்னிப்பா கவனிச்சிக்கிட்டிருக்குது. அதிருப்தியா இருக்கக்கூடியவங்களை லிஸ்ட் எடுத்துக்கிட்டிருக்காங்களாம்.'' 

""அதிருப்தியில் ராஜினாமா செய்த குஷ்புவின் அடுத்த ஸ்டெப் என்ன?''

""அவர் இப்போதைக்கு வேறெங்கும் போவதாக இல்லைங்கிறதைத்தான் நம்ம நக்கீரனில் விளக்கமா போட்டிருந் தாங்களே... குஷ்பு ராஜினாமா தி.மு.க மேல்மட்டத்தில் இப்பவும் விவாதிக்கப்படுது. 2011 தேர்தலின் போது தி.மு.கவுக்கு எதிரா 2ஜி வழக்கை ஆங்கில ஊடகங்கள் பிரிச்சி மேய்ஞ்சிக்கிட்டிருந்தப்ப அங்கே போய் பதிலடி கொடுத்தவர் குஷ்பு தான்ங்கிறதையும், அந்த தேர்தலில் தி.மு.க தோற்றபோது, இது தி.மு.கவின் தோல்வி அல்ல, மக்களின் தோல்வின்னு டிபிக்கல் தி.மு.ககாரர் போலவே கமெண்ட் கொடுத்ததும் குஷ்புதான்ங்கிறதை மேல்மட் டத்தில் உள்ள சிலர் ஞாபகப்படுத்தியிருக்காங்க. அவரை சமாதானப் படுத்தியிருக்கலாம்னும் தலைமை வட்டாரத்தில் பேசப்பட்டிருக்குது.''

""டி.கே.எஸ்.இளங்கோவன்கூட குஷ்பு தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்திருக்க லாம்னு சொல்லியிருந்தாரே?''

""கலைஞர்கூட, கட்சியில் இதுதான் பிரச்சினைன்னு வந்து பேசியிருந்தா சரி செய்திருக்கலாம். அவரே ராஜினாமாங்கிற முடிவை எடுத்ததும் நாம என்ன செய்வதுன்னு சொல்லியிருக்காரு. ஸ்டாலினும் அவரோட குடும்பத்தினரும்தான் குஷ்பு விலகலுக்கு காரணம்னு சொல்லப்படுற நேரத்தில், சினிமா வட்டாரத்தில் உள்ள அரசியல் ஆர்வமுள்ள நபர்கள் ஒரு தகவலைச் சொன்னாங்க. அதாவது, சினிமா இன்டஸ்ட்ரியில் இருக்கிற உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் குஷ்புவை நேரில் சந்திச்சி, தங்கள் தரப்பில் நடந்தவைகளை விளக்கி எதையும் தப்பா எடுத்துக் காதீங்க. பார்ட்டிக்காக நீங்க நல்லா வேலை பார்க்குறீங்க. அதைத் தொடர்ந்து செய்யுங்கன்னு சொல்லியிருக்காரு. ஆனாலும், தொடர்ச்சியான நெருக்கடிகளால குஷ்பு ராஜினாமா செய்துட்டாரு. நம்ம நக்கீரன் போனமுறையே சொன்ன மாதிரி 19-ந் தேதி கனடாவுக்கு குஷ்பு கிளம்பிட்டாரு. தி.மு.க தரப்பிலிருந்து யாரும் அவர்கிட்டே பேசல.''

""தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பா.ம.க.வின் சிறப்பு செயற்குழு 18-ந் தேதி கூடியதே, என்ன பேசினாங்களாம்?''

""திண்டிவனத்தில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் ஏ.கே.மூர்த்தி பேசுறப்ப, அய்யாவோட பேச்சை மீறி நடந்துக்கிட்டோம். அதோட பலனை அனுபவிக்கிறோம்னு சொல்யிருக்கிறார். காடுவெட்டி குரு பேசுறப்ப, தாயிற் சிறந்த கோயிலுமில்லை. தந்தை சொல் மிக்க மந்திரமில்லைன்னு சொல் றதுபோல அய்யாவோட பேச்சு தான் நமக்கு மந்திரம். அவர் நல்லது கெட்டதை நினைச்சுதான் சொல்லுவார். அய்யா பேச்சை மீறினால் என்ன நடக்கும்ங்கிற துக்கு இந்தத் தேர்தல் ஒரு பாடம்னு சொல்லியிருக்காரு. அன்புமணியை மனசிலே வச்சித்தான் சொல்றா ரோன்னு கட்சிக்காரங்களுக்கு டவுட்டாம்.''

""அன்புமணி என்ன பேசினாராம்?''

""அய்யா பேச்சை இனி என்னைக்கும் மீறமாட்டோம்னு சொல்லி யிருக்காரு. சிறப்பு செயற்குழுவுக்கு முன்னாடி அன்னைக்கு காலையில் புதுச்சேரியில் வழக்கமான செயற்குழு நடந்திருக்குது. அதிலே அன்புமணி பேசுறப்ப, டாக்டரய்யாவோட பேச் சைக் கேட்காததால தகுந்த பாடத்தைக் கற்றிருக்கேன்னு சொல்லி அனைவரிட மும் மன்னிப்பு கேட்கிற விதத்தில் எழுந்து நின்று கும்பிட்டாராம். சிறப்பு செயற் குழுவுல ராமதாஸ் பேசுறப்ப, ஓட்டு மெஷினில தில்லுமுல்லு பண்ணி ஜெயிச்சிருப்பதை வழக்கு போட்டு நிரூபிப்போம். 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு டெபாசிட் போற மாதிரி வேலை செய்ய ணும்னு சொல்லியிருக்காரு.'' 

""காங்கிரஸ் ஆட்சி யில் நியமிக்கப்பட்ட மேற்குவங்காளம், கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் கவர்னர்களையெல்லாம் மாற்றுவதற்கு வேகம் காட் டும் மோடி அரசு, அதே காங்கிரஸ் ஆட்சியில் நிய மிக்கப்பட்ட காங்கிரஸ்கார ரான தமிழக கவர்னர் ரோசய் யாவை மட்டும் மாற்றுவ தில் அவசரம் காட்டாமல் அமைதியா இருக்குதே, ஏன்?''

""கவர்னருக்கும் தமிழக முதல்வர் ஜெ.வுக்கும் நல்ல புரிந்துணர்வு இருக்குங்கிறதை டெல்லி புரிஞ்சு வச்சிருக்குது. ராஜ்யசபாவில் அ.தி.மு.கவின் ஆதரவு பா.ஜ.கவுக்கு தேவைப்படும் காலம் இது. அதோடு, மோடி-ஜெ. நட்புறவும் சுமூகமா இருக்குது. அதை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு பா.ஜ.க நினைக்குதாம். ஆனா, மத்திய அரசில் உள்ளவங்ககிட்டே காரணம் கேட்டால், அரசுடன் ஒத்துழைக்காத கவர்னர்கள், அண்மையில் நிய மிக்கப்பட்ட கவர்னர்கள், அரசியல் நோக்கத்தோடு செயல்படும் கவர்னர்கள் இவங்களை மாற்றுவதில் தான் அவசரம் காட்டுறோம். மற்றவங்களை பொறுமையா மாற்றுவோம். அப்ப ரோசய்யாவும் மாற்றப்படுவார்னு சமாளிக்கிறாங்க.''

""ரோசய்யா பதவிக்கு ஆபத்து தற்போதைக்கு இல்லாம இருக்கலாம். ஆனா தமிழ்நாட்டு சீனியர் மந்திரிக்கு சிக்கல்னு தகவல் வருது. அதைப் பற்றி நான் சொல்றேன். மந்திரியா இருந்த கே.பி.முனுசாமி, வக்கீல்  அணி செயலாளரா இருந்த மனோஜ்பாண்டியன் இவங்க ளோட பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஓ.பன்னீ ருக்கு ஒரு மாத கெடு விதிக்கப்பட்டிருக்காம். அவர் மேலே என்னென்ன குற்றச்சாட்டுகள் இருக்குங்கிறதுக்கான ஆதா ரங்களை ஒரு குரூப் பட்டியல் போட்டுக்கிட்டிருக்காம்.''

ad

ad