புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2015

தீர்மானத்தால் இலங்கையின்இறையாண்மைக்கு பாதிப்பு இல்லை-பிரிட்டன் தூதுவர்

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் இலங்கையின்இறையாண்மைக்கு பாதிப்பு இல்லை என்று இலங்கையிலிருக்கும் பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானம் மூலம் இலங்கையின் ஒருமைப்பாடு மற் றும் சுயாதீனத் தன்மை மேலும்உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவரின் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்தத் தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியன் மூலம் செழிப்பான நாட்டை உருவாக்க வேண்டிய தேவை உள்ளதை இலங்கை சர்வதேசத்துக்குவெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டிருப்பதனால் எதிர்காலம் தொடர்பான நல்ல அறிகுறிகள்தென்படுவதாகவும் பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad