புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2015

இன்றைய ஆட்டங்கள் 2015.10.04

download (2)
மைக்கல் வி.கழகத் தொடர்
வடமராட்சி மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தினால் அணிக்கு 7 வீரர்கள் பங்குபற்றும் உதைபந்தாட்டத் தொடர் ஒன்று யாழ்.மாவட்ட
ரீதியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தத்தொடரில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் வதிரி பொம்மேர்ஸ் விளையாட்டுக் கழத்தை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது.
மன்னார் உதைபந்தாட்டத் தொடர்
மன்னார் உதைபந்தாட்ட லீக்கினால் அழைக்கப்பட்ட அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டுவரும் லீக் முறையிலான உதைபந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் சமீபகாலமாக இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மன்னார் நகரசபை மைதானத்தில் இடம்பெறும் ஆட்டத்தில் சாவற்கட்டு கில்லறி அணியை எதிர்த்து மன்னார் சின்னக்கடை கிறின் பில்ட் அணி மோதவுள்ளது.
வடமாகாண உதைபந்தாட்டத் தொடர்
வடமாகாண உதைபந்தாட்ட அபிவிருத்திப் பேரவை நடத்தி வரும் உதைபந்தாட்டத் தொடரின் ஆட்டமொன்று இன்று இலுப்பைக்கடவை அந்தோனியார்புரம் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் அந்தோனியார்புரம் அணியை எதிர்த்து இளவாலை யங்கென்றிஸ் அணி மோதவுள்ளது.
பாடசாலைகளுக்கு இடையிலான ரி-20
யாழ். மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்டச் சங்கம் நடத்தி வரும் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கிடையிலான ரி-20 தொடரின் ஆட்டங்கள் சில இன்று நடைபெறவுள்ளன. யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் காலை 9 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக்கல்லூரி அணி மோதவுள்ளது. பிற்பகல் 1.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி மோதவுள்ளது.
வானவில் வி.கழகத்தொடர்
அராலி வானவில் விளையாட்டுக்கழகம் நடத்தும் 7 வீரர்கள் பங்குபற்றும் விலகல் முறையிலான உதைபந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் குறிந்த கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் துணைவி நீயூஸ்ரார் அணியை எதிர்த்து அராலி ஜேம்ஸ் அணி மோதவுள்ளது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் தெல்லிப்பளை 5 ஸ்ரார் அணியை எதிர்த்து தெல்லிப்பளை பிறைற் ஸ்ரார் அணி மோதவுள்ளது

ad

ad