புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2015

மார்கழிக்குள் முழுமையான மீள்குடியேற்றத்திற்கு முயற்சிப்பேன் : வளலாய் மக்களுக்கு உறுதியளித்தார் எதிர்க்கட்சித் தலைவர்


இன்றைய தினம் மீள்குடியேற்றப்பட்ட.  வளலாய் பகுதி  மக்களை  எதிர்க்கட்சித்தலைவர் சந்தித்து பேசுகையில் குறித்த பகுதி மக்கள் இனி மழைக்காலம்
ஆரம்பிக்கப்போகிறது.நாம் குடிசைகளிலே வாழ்கின்றோம்.எமக்கு இருப்பிடம் அமைத்து தருமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் முதலில் முழுமையான மீள்குடியேற்றத்திற்கு நடவடிக்கை எடுப்பேன்.அதன்பின்னர் வெளிநாட்டு உதவியுடன் அடிப்படை வசதிகள் குறித்து கவனம் செலுத்துவதாக அவர் உறுதிமொழியளித்தார்.

மேலும் தமிழ் மக்களுக்கு கெட்டகாலம் போய் நல்ல காலம் மலர்ந்துள்ளது.எனவே நீங்கள் உங்கள் பிள்ளைகளை நன்றாகக் கல்வியில் வளர்ச்சி பெறச் செய்யுங்கள் கல்வியே எதிர்கால சொத்து என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை வளலாய் பகுதியில் 400ஏக்கர் காணிகள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இன்னமும் 200ஏக்கர் காணி விடுவிக்கப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad