-

4 அக்., 2015

தற்கொலைக்கு முயற்சி செய்த சுரேஷ்குமார் மீது வழக்கு .. நிராகரித்து ரத்து செய்தார்.நீதிபதி

தற்கொலைக்கு முயற்சி செய்த சுரேஷ்குமார் மீது "தற்கொலை முயற்சி" மற்றும் "கொலை மிரட்டல்" ஆகிய இரண்டு கள் பதிவு செய்யப்பட்டு திருச்சி சித்திரவதை முகாமிலிருந்து கைது செய்யப்பட்டு நீதிபதியிடம் அழைத்துச் சென்றனர் தமிழக காவற்துறையினர். 
எனினும், மேற்படி வழக்கை ஆராய்ந்த நீதிபதி "இடுப்பிற்குக் கீழ் இயங்காத ஒரு நபர் எவ்வாறு கொலை மிரட்டல் விட முடியும்" என்றும் "அவருக்கான உதவியாளரை நியமிக்காத பட்சத்திலேயே மனவிரக்தி அடைந்து தனது கையை அறுத்துக் கொண்டார்" எனவும் கூறிய நீதிபதி அவர்கள்.... "
இவ்வாறானவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து நீதியைக் கேவலப்படுத்த வேண்டாம்" என்று கூறியதோடு மிகவும் கோபமடைந்த நீதிபதி அவர்கள் வழக்குப் பதிவு செய்த கைது ஆணையை நிராகரித்து ரத்து செய்தார்.
தமது செயலானது மிகவும் ஏமாற்றம் அடைந்ததையிட்டு சுரேஷ்குமாரை மீண்டும் சிறப்பு முகாமில் கொண்டு போய் விட்டுள்ளனர், தமிழக காவல்துறையினர்.

ad

ad