அப்போது அவர், ‘’தமிழக சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. இதில் லட்சிய தி.மு.க.வும் போட்டியிடும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு கட்சிகள்தான் பலம் வாய்ந்தவை. மற்ற கட்சிகள் எல்லாம் தனித்தனியாக நிற்கின்றன. இவற்றால் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை.
லட்சிய தி.மு.க. இந்த தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணியில் சேரும். அது எந்த கூட்டணி என்பதை விரைவில் தகுந்த நேரத்தில் அறிவிப்பேன். ஏற்கனவே நான் பல்வேறு தேர்தல்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து இருக்கிறேன். வருகிற நவம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்வேன். மக்களிடம் எனது கருத்துக்களை எடுத்துச் சொல்வேன்.
தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது பின்னால் முடிவு செய்யப்படும். சிம்பு போட்டியிடுவாரா என்று கேட்கிறார்கள். அவர் வழி வேறு, எனது வழி வேறு. சட்டசபை தேர்தலில் மக்கள் நலன் கருதி எங்கள் கட்சி தேர்தலை சந்திக்கும். அது பற்றி விவரங்களை பின்னர் தெரிவிப்பேன்’’என்று கூறினார்.