புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2015

ஐ.நா அமர்வு பாதிக்க கூடாது என்பதற்காகவே மௌனம் காத்தேன் : வெகுவிரைவில் சி.வியிடம் விளக்கம் கோருவேன்

தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிப்படுத்திய கருத்துக்கள் மற்றும் அவரின் செயற்பாடுகள் குறித்து விரைவில்
அவரைச் சந்தித்து விளக்கம் கோரவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

இன்று  வலிகாமம் கிழக்குப் பகுதியில் உள்ள வளலாய் பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்த மக்களைச் சந்தித்து உரையாடிய எதிர்க்கட்சித் தலைவர், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தேர்தல் காலத்திலும், அதனைத் தொடர்ந்து ஐ.நா மனித உரிமை பேரவையின் அமர்வு இடம்பெறும் காலத்திலும், வடமாகாண முதலமைச்சர் தொடர்பில் நாம் வேறுபட்ட கருத்துக்களை கூறுவது, அல்லது எங்களுக்குள் குழப்பம் இருப்பதாக தென்படுவது பொருத்தமான விடயமாக இருந்திருக்காது.அந்த காரணங்களின் நிமித்தமே நாம் மௌனமாக இருந்தோம். தற்போது ஐ.நா அமர்வுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், அது குறித்து சி.வியிடம் விளக்கம் கோரவுள்ளதாகவும்,அதன் கடமைப்பாடு எங்களுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாம் அறிய வேண்டிய விடயங்களை அறிந்து அதன்பின்னர் அனைவரும்  ஒற்றுமையாக மக்களின் நலன்கருதி செயற்படவேண்டும்.
மக்கள் முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறார்கள்.நீண்டகாலமாக பலதுன்பங்களுக்கு ஆளானமக்கள்,பல அழிவுகளை எதிர்கொண்ட மக்கள் தங்களுடைய வாழ்க்கையை இன்னமும் ஆரம்பிக்க முடியாமல் இருக்கிறார்கள்.மக்களைப் பொறுத்த வரையில் அரசியல் தீர்வு ஏற்பட்டு அதன்மூலமாக ஓர் வித்தியாசமான எதிர்காலத்தை பெறுவதற்கு வாய்ப்பு வந்திருக்கிறது அதனை யாரும் குழப்பகூடாது என்றார்.

ad

ad