புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2015

யாழ்ப்பான அதிவேக நெடுஞ்சாலை திட்டம் கைவிடப்படலாம்

கண்டி அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகள் தொடர்பில் இலங்கை வர்த்தகர் ஒருவரின் தலையீடுகள் குறித்து சீனா கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பிலிருந்து கண்டி மற்றும் யாழ்ப்பாணத்துக்கான அதிவேகப்பாதையின் திட்ட வரைபு கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் உருவாக்கப்பட்டது. அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் காலத்தில் அதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
இந்நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நெருக்கமான வர்த்தகர் ஒருவர் இந்த அதிவேகப்பாதை நிர்மாணப் பணிகளில் அநாவசியத் தலையீடுகளை மேற்கொள்வதாக சீன அரசும், இலங்கையிலுள்ள சீனத் தூதரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதன் காரணமாக அதிவேகப் பாதை நிர்மாணத்துக்கான சீனாவின் கடனுதவி இதுவரை கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இதன் காரணமாக கண்டி மற்றும் யாழ்ப்பாணத்துக்கான அதிவேகப்பாதையின நிர்மாணப் பணிகள் கைவிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ad

ad