புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2015

விசாரணையில் தமிழக தமிழ் நீதிபதிகள் சட்டதரானிகள் இடம்பெற வேண்டும் ..கம்யூனிசகட்சி கோரிக்கை


இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள போர்க்குற்ற விசாரணையின்போது தமிழ் நீதிபதிகளும் நியமிக்கப்படவேண்டும் என்று இந்திய கம்யூனிஸக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய கம்யூனிஸக்கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
இதேவேளை நீதிபதிகள் குழுவில் பொதுநலவாய மற்றும் வெளிநாடுகளின் நீதிபதிகளும் உள்வாங்கப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
குறித்த நீதிபதிகள் இறைமை கொண்டவர்களாகவும் பக்கசார்பற்றவர்களாகவும் இருப்பது அவசியம். இந்தநிலையில் இந்திய நடுவண் அரசாங்கம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பின்னிருந்து செயற்படவேண்டும் என்றும் ராஜா கேட்டுக்கொண்டார்.
இதேவேளை இலங்கையில் சர்வதேச விசாரணையை கோரி தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய நரேந்திரமோடியின் அரசாங்கம் அங்கீகரிக்காமையானது கண்டிக்கத்தக்க செயல் என்றும் ராஜா குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க  இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபாலவும் பிரதமர் ரணிலும் வடக்குகிழக்கில் இருந்து படையினரை விலக்கி தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வழியை ஏற்படுத்தவேண்டும் என்றும்  சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

ad

ad