புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2015

சென்னையில்கணவர் தொடர்ந்து குடித்து விட்டு தகராறு செய்ததால், இரு குழந்தைகளை கொன்று, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்

கணவர் தொடர்ந்து குடித்து விட்டு தகராறு செய்ததால், இரு குழந்தைகளை கொன்று, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சென்னையில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுசென்னை, கீழ்பாக்கம் பனபி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சந்தோஷ். இவர் சரக்கு லாரிகள் மூலம் இரும்பு பொருட்களை கையாளும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மம்தா (35). இவர்களது மகள் யாஷி (14), மகன் அனுஷ் (7) ஆகியோர் சேத்துப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.சந்தோஷ் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தவராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மதியமும் சந்தோஷ் குடித்து விட்டு வந்து, மம்தாவுடன் தகராறு செய்திருக்கிறார். அப்போது, இனிமேல் குடித்து விட்டு வந்தால் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வேன் என மம்தா கூறியிருக்கிறார். இதை கண்டுக்கொள்ளாமல் சந்தோஷ் சென்றிருக்கிறார்.
இந்நிலையில், பள்ளிக்கு சென்று விட்டு மாலை சுமார் 3.30 மணியளவில் வீட்டுக்கு வந்த யாஷியை படுக்கையறைக்கு அழைத்து சென்ற மம்தா, அங்கு யாஷியின் கழுத்தை பாவாடை நாடாவால் இறுக்கி கொன்றிருக்கிறார். இதையடுத்து, சுமார் 4 மணிக்கு வந்த அனுஷையும் பாவாடை நாடாவால் இறுக்கி கொன்றிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, தனது கணவர் சந்தோஷ் சர்க்கரை நோய்க்கு பயன்படுத்தும் மாத்திரையில் 30 மாத்திரைகளை எடுத்து மொத்தமாக சாப்பிட்டிருக்கிறார். பின்னர் தனது அக்கா கவுசல்யாவுக்கு போன் செய்து, நடந்தவற்றை கூறியிருக்கிறார்.இதனால், பதறியபடி, கவுசல்யா தனது கணவருடன் மம்தா வீட்டிற்கு வந்திருக்கிறார். அங்கு மயக்கத்தில் இருந்த மூவரையும் கீழ்ப்பாக்கத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர். அங்கு குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியிருக்கின்றனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மம்தாவை மேல்சிகிச்சைக்காக பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் இன்று காலை மயக்கம் தெளிந்திருக்கிறது.இதுகுறித்து, எழும்பூர் 2-வது மெட்ரோபாலிட்டன் மாஸ்திரேட் ஜெயந்தி முன்னிலையில், மம்தா வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதில், தனது கணவர் தினமும் குடித்து விட்டு வந்த தகராறு செய்ததால் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து கீழ்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலியான குழந்தைகளின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, சந்தோஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.குடியால் இரு குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad