ஜனாதிபதியாக நான் பதவி வகித்த காலத்தில், தன்னால் முன்னெடுக்கப்பட்ட சில விடயங்கள் தவறானவை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றத்தில் இன்று முதல் முறையாக உரையாற்றினார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெறும் பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
புலம்பெயர்ந்த தமிழர்கள் கேட்பதை எல்லாம் கொடுப்பது நல்லிணக்கம் இல்லை. அதேபோல தமிழ் கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கைகள் தொடர்பில் மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.