யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்தி, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜாங்க அமைச்சருக்கு நேற்றைய தினம் வழங்கியுள்ளார்.
இதன்படி இனிவரும் காலங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்தி மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் இவரது தலைமையிலேயே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது