புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2015

புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கு நிதியுதவி

வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் யுத்தத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட நிதியுதவி வழங்கப்படவுள்ளன. இரண்டாம் கட்ட நிதி வழங்கும் நிகழ்வாக திணைக்களத்தால் தெரிவு செய்யப்பட்டு தமது வாழ்வாதார திட்டங்களை ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 147 பயனாளிகளுக்கு தலா ஐம்பது ஆயிரம் பெறுமதியான உதவித்திட்டம் வழங்கப்படவுள்ளன. இதன்படி எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 11 மணிக்கு யாழ்ப்பாணம் - நாவலர் வீதியிலுள்ள வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் அலுவலகத்திலும், 11 ஆம் திகதி காலை 10 மணிக்கு  வவுனியா - கிராம அபிவிருத்தி மண்டபத்திலும், 11 ஆம்  திகதி 2 மணிக்கு முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலக மண்டபத்திலும், 12 ஆம் திகதி காலை 10 மணிக்கு கிளிநொச்சி - கரைச்சி பிரதேசசபை மண்டபத்திலும் இந்த உதவித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்  அறிவித்துள்ளார்.

ad

ad