இந்தியா சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுமாறு ஈழ மக்கள் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது அனுதாபங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். வரலாறு காணாத பெருமழையால் எமது தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டு சொத்துக்களை இழந்து மழையில் தவிக்கும் உறவுகளின் துயரில் நாமும் எமது ஈழ மக்கள் சார்பில் பங்கெடுக்கின்றோம். இதே வேளை ஈழ மக்கள் துன்புறும் வேளைகளில் எல்லாம் கண்ணீர் சிந்தி எம் காப்பரணாய் மாறத்துடிக்கும் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ புலம்பெயர் ஈழ மக்களையும், உலகமெலாம் வாழும் தமிழ் உறவுகளையும், மனிதாபிமானம் உள்ள மக்களையும் உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.