புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2015

சென்னை வெள்ளத்தில் சிக்கி ஈழத்தமிழர்களும் பாதிப்பு: உதவிகளுக்கு தூதரகத்தை நாடவும்


சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஈழத்தமிழர்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர்.
நாட்டில் போர் காரணமாக இந்தியாவிற்கு  இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பெருமளவில் சென்னை நகர் மற்றும் பறநகர் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளைப் புரட்டிப் போட்டுள்ள வெள்ளத்தினால், ஈழத் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும், வளசரவாக்கம் பகுதி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
அத்துடன் ஈழத் தமிழர்கள் வசிக்கும் கே.கே.நகர், மடிப்பாக்கம், அண்ணாநகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், நெசப்பாக்கம், போரூர், உள்ளிட்ட பகுதிகளிலும், பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளனர். பலர் தமது வீடுகளை விட்டு வெளியேறி, மாடி வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
அத்துடன் தொலைபேசித் தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சென்னை வெள்ளத்தினால் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல் கிடைக்கவில்லை என்று  வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால், உதவிகள் தேவைப்படுமிடத்து, இலங்கை  தூதரகத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தர்மபால, 0091-9962627956,  இந்திரக்க 0091-9444010999 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad