புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2015

குற்றச்சாட்டுக்களற்ற கைதிகளை விடுவிக்க அரசு இணக்கம்

வழக்கு தாக்கல் செய்யும் அளவிற்கு குற்றச்சாட்டுக்கள் இல்லாத தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்த அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை நடைபெற்ற  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கமே கடுமையான குற்றங்களைப் புரிந்த தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் 95 பேரை விடுவித்ததாக குறிப்பிட்ட அமைச்சர், சிறு குற்றங்களை இழைத்த கைதிகளையே நல்லாட்சி அரசாங்கம் விடுவித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

என்னைப் பொறுத்தவரையில் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் விடுதலை வழங்க வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகின்றேன். அதில் தமிழர், சிங்களவர் என்ப பிரிவினைக்கு இடமில்லை.  வழக்கு தொடரப்படாத அரசியல் கைதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் இருக்கும் பட்சத்தில் வழக்கு தொடர்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு வழக்கு தொடரப்படாத சந்தேக நபர்களை விடுதலை செய்ய தீர்மானித்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ad

ad