முறையற்ற உறவு தொடர்பில் சவூதியில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணுக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி சட்டத்தின்படி அவருக்கு கல்லால் எறிந்து இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று இன்று நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று சவூதியில் 50பேருக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள போதும் இலங்கைப் பெண்ணின் பெயர் அதில் இருக்கவில்லை என்று நேற்று வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் துறை அமைச்சர் தலதா அத்துகோரளை தெரிவித்திருந்தார்.
இந்தநிலையிலேயே சுமந்திரன் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.