அவன்ட் காட் ஆயுத கப்பல் தொடர்பான விசாரணைகளுககு சமுகமளிக்காமல் இருந்தால், நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதியை கைதுசெய்ய இன்டர்போலின் உதவி நாடப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் தொடர்பில் தற்போது பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி வருகிறது.
எனினும் மருத்துவ சிகிச்சை ஒன்றை வெளிநாட்டின் பெறுவதன் காரணமாக சேனாதிபதிக்கு இந்த விசாரணையில் பங்கேற்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையிலேயே அவர் விசாரணையில் இருந்து தப்ப முயற்சித்தால் சர்வதேச பொலிஸின் உதவி நாடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை அவன்ட் காட் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கை எதிலும் கைச்சாத்திடவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.