புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2020

கொரோனா வைரஸால் பிரான்ஸில் பலியான யாழ் இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்கள்

பிரான்சில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பலியான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.யாழ். தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) பிரான்சில் கிறித்தை பகுதியில் வசித்துவந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ள நிலையில் இவருடைய மனைவி 5 மாதக் கர்ப்பிணி ஆவார்.

அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு சென்று திரும்பியதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, நீரிழிவு நோயும் இவருக்கு இருந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

14 நாட்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, நோய் அதிகரித்த நிலையில் 8 தினங்கள் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்துள்ளார்.

இறுதியாக மனைவியை மட்டும் பார்க்க அனுமதித்ததுடன், இவருடைய உடலை குடும்பத்தினரிடம் கையளிக்க மறுத்துவிட்டனர்.

ad

ad