கொரோனா வைரஸ் தொற்று தனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றிச்சென்ற இரண்டு பஸ்கள் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார். 29 பேர் காயமடைந்தனர்.
மூன்று பஸ்களில் சம்பூர் நோக்கி சுமார் 100 பேரை ஏற்றிச்சென்று கொண்டிருந்த போது, அவற்றில், இரண்டு பஸ்கள் கொழும்பு நோக்கி பயணித்த மரக்கறி லொறியில் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் 26 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அழைத்து செல்லப்பட்டவர்கள் என்றும் ஏனைய மூவரும் கடற்படையினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தினை அடுத்து, தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அழைத்து செல்லப்பட்ட மூவர் தப்பியோடியுள்ளதாகவும் அவர்களில் இருவர் பின்னர் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது