புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 ஏப்., 2020

யாழ்ப்பாணம் உட்பட 6 தவிர்ந்த 19 மாவட்டங்களுக்கு நாளை ஊரடங்கு தளர்வு; மீண்டும் 20 ஆம் திகதி தளர்த்தப்படும்

இலங்கையில் கொரோனா ஆபத்து காரணமாக நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 19 மாவட்டங்களுக்கு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 4 மணிக்கு அமுலுக்குவரும்.

குறித்த மாவட்டங்களுக்கு மீண்டும் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம், கொழும்பு, புத்தளம், களுத்துறை, ஹம்பகா உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரும்வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது