புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 ஏப்., 2020

கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்ட தலைவர்கள் பட்டியலில் இலங்கை ஜனாதிபதிக்கு 9 வது இடம்

கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்கொண்ட தலைவர்கள் பட்டியலில் நியுசிலாந்து பிரதமர் ஜெர்சிண்டா ஆர்டன் முதலிடம் பிடித்துள்ளார்.

சிங்கப்பூர் , ஐஸ்லாந்து ,ஒஸ்ரியா , பின்லாந்து ,நோர்வே கனடா ,தென்கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் முதல் ஏழு இடங்களை பிடித்துள்ள அதேவேளை எட்டாம் இடத்தை ஹொங்கொங் நாட்டின் தலைவரும் 9 வது இடத்தை இலங்கையின் தலைவரும் பிடித்துள்ளனர்.

அவுஸ்ரேலியாவை தளமாக கொண்டு இயங்கும் ஐ சி எம் ஏ நிறுவனம் வெளியிட்டுள்ள தரப்பட்டியலில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய பிரதமருக்கு 38 வது இடமும் அமெரிக்க அதிபருக்கு 70 வது இடமும் பிரிட்டன் பிரதமருக்கு 88 வது இடமும் இந்த பட்டியலில் கிடைத்துள்ளது