புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 ஏப்., 2020

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளை மீண்டும் முடக்கத் திட்டம்?

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் அரியாலையைச் சேர்ந்த 7 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பது இனம் காணப்பட்டுள்ள நிலையில், குடாநாட்டின் சில பகுதிகள் மீண்டும் முடக்கப்படவாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், இப்பகுதிகளில் அடுத்துவரும் நாள்களில் விரைவாக கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா பாதித்த நோயாளிகள் யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களின் பின்னர் இனங்காணப்பட்டு வருகின்றனர். எனவே இனம்காணப்பட்ட பகுதிகளை பாதுகாப்பு கருதி மீளவும் முடக்குவது தொடர்பில் உயர் மட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அநேகமாக இந்த முடிவு இன்று எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.