புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 ஏப்., 2020

பூவரசங்குளம் விபத்தில் பூசகர் பலி

வவுனியா- பூவரசங்குளம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பூசகர் ஒருவர் உயிரிழந்தார்.
வவுனியா- பூவரசங்குளம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பூசகர் ஒருவர் உயிரிழந்தார்.

வவுனியா - பூவரசங்குளம்-செட்டிகுளம் வீதியில் உள்ள மணியர்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியில் திரும்ப முற்பட்டபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மணியர்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பணியாற்றும் 47 வயதுடைய பூசகரும், 26 வயதுடைய இளைஞன் ஒருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், ஆலய பூசகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து, மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம்பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.