புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2020

தொற்றுநோயினால் இத்தாலியின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது

இந்த வருடம் கொரோனாவைரசின் தாக்கத்தால் பொருளாதார ரீதியில் இத்தாலி மிக கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலைக்குள்ளாகும் என அனைத்துலக நாணய நிதியம் (IMF – International Monetary Fund) கணிப்பிட்டுள்ளது.

Washington அமைப்பால் 6 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் “உலக பொருளாதார மன்றம்” (World Economic Forum) அறிக்கையில் கொரோனாவைரசால் உலக பொருளாதாரத்தின் மற்றும் வர்த்தகத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட தாக்கங்கள் சார்ந்து சில கணிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த 2020 ஆண்டிற்கான இத்தாலியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (PIL – ஆங்கிலத்தில் GDP) 9,1% சதவீதமாக வீழ்ச்சியடைந்தும், இதைத் தொடர்ந்து அடுத்த வருடம் 4,8% சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அதாவது 2021 ஆண்டில் இன்று இழந்த வருமான நிலையில் பாதியை மட்டுமே மீட்டெடுக்க சாத்தியக்கூடும்.

ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இத்தாலியை விட கிரேக்கம் (Greece) நாடு மட்டுமே கூடியே வீழ்ச்சியை கண்டுள்ளது (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% விகித வீழ்ச்சி காணப்படுகிறது).

உலகப் பொருளாதாரம்

அனைத்துலக நாணய நிதியத்தின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் 3% வீதம் வீழ்ச்சியடையும். இது ஒருபோதும் காணப்படாத ஒரு வீழ்ச்சியாக அமையும். மேலும், அடுத்த ஆண்டில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை 5.8% வீதம் அளவு மீட்டெடுக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2009 ஆம் ஆண்டில், உலகளாவிய நிதி நெருக்கடி வெடித்தபின்னர், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இழப்பு 0.1% ஆக இருந்தது. இதனுடன் தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஒப்பிடுகையில் இது மிகவும் மிதமாகவே உள்ளது. ஏனெனில், இந்த வைரசு அனைத்து நாடுகளையும் தாக்கியுள்ளது. ஒரு உலகளாவிய பொருளாதார நெருக்கடியாக உருவாகியுள்ளது. அதிலும், சுற்றுலா, பயணம் போன்ற அதிக மக்களை ஈர்க்ககூடிய துறைகளில் தங்கியுள்ள நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன என சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் Gita Gopinath தெரிவித்துள்ளார்.
அத்துடன், வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடைந்து வருகின்ற பொருளாதாரங்கள் இந்த பெரும் தாக்கத்தால் பாரிய பின்னடைவுகளை எதிர்நோக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சீனா மற்றும் ஆசிய நாடுகள்

சீனப் பொருளாதாரம் 2020 ஆம் ஆண்டில் வைரசினால் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடிகளை மிக தீர்க்கமாக சமாளித்துள்ளது. அதாவது, நாட்டின் பொருளாதாரத்திற்காக 7 லட்சக் கோடிகள் யுவான் (9 கோடி யூரோக்கள் – சீனத் தேசிய வருமானத்தில் 8% வீதம்) மதிப்புள்ள உடனடி தூண்டுதல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனால், 1.2% வீதமான சிறிய வளர்ச்சியை இந்த ஆண்டு அடைய முடியும். அதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு 9.2% வீதமாக அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கிறது.

அதேபோல், India, Indonesia, Vietnam ஆகிய ஆசிய நாடுகளும் பொருளாதாரத்தில் பெரிதாக பாதிக்கப்படாது என நம்பப்படுகிறது.

மேலும் , அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் ஐரோப்பா மிகவும் பொருளாதார நெருக்கடியில் தள்ளப்படும் எனவும், ஏனைய வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளைவிட இத்தாலியே பின்னடைவில் இருக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கிறது.

ad

ad