புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 ஏப்., 2020

கனடாவில் கொரோனாவுக்கு பலியான புங்குடுதீவு-நெடுந்தீவு தம்பதி மனைவி நேற்றுமுன்தினமும் கணவன் இன்றும் பலியானார்கள்

புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவந்த கணவனும் மனைவியும் கொரோனாவுக்கு பலியான பரிதாபகரமான சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் தீவுகம் புங்குடுதீவைச் சேர்ந்த சோதி என்றழைக்கப்படும் நாகராஜா தேசிங்குராஜா என்பவரும் நெடுந்தீவைச் சேர்ந்த அவருடைய துணைவியார் புஸ்பராணி நாகராஜா கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்துள்ளனர்.
இவர்களில் மனைவி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.இருவருமே கனடா உதயன் பத்திரிகை  வினியோகம்  செய்து வருபவர்களாவர்