புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2020

சுவிஸில் புதிதாக தொற்றேற்படுவது குறைந்து வருகிறது

14.04.20 (இன்று) சுவிஸின் ஊடகமாநாட்டில் சுகாதார அமைப்பில் இருந்து பற்றிக் மத்தீஸ், வெளிநாட்டு அமைச்சில் இருந்து கான்ஸ் பீற்றர் லென்ஸ் மற்றும் சுவிஸ் இராணுவத்தில் இருந்து பிறிகாடியர் றேய்னால்ட் டிறொட்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

“ஈஸ்ரர் பண்டிகை நாட்களில் அழகான காலநிலையின் போதிலும் மக்கள் வெளியில் செல்வதையும் ஒன்றுகூடுவதையும் தவிர்த்தது பொறுப்புணர்ச்சியையும், புரிந்து கொள்ளலையும் காண்பிக்கின்றது. தற்பொழுது கிட்டத்தட்ட 400 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் மருத்துவமனைகளில் உள்ளனர். எனினும் ஈஸ்ரர் நாட்களில் புதிய தொற்றேற்புகள் மிகக்குறைவாகவே இருக்கின்றன. ஐரோப்பா முழுவதும் கொறோனா மலையுச்சியை கடக்கவில்லை. இருந்தும் பல ஐரோப்பிய நாடுகளில் புதிய தொற்றுகள் குறைந்து வருகின்றன. சுவிஸில் சில நாட்களாக எண்ணிக்கையை பார்க்கையில் மெதுவாக தொற்றேற்படுவது குறைந்து வருகிறது.” என பற்றிக் மத்தீஸ் கூறினார்.



கான்ஸ் பீற்றர் லென்ஸ்: “வெவ்வேறு நாடுகளிற்கு சுவிஸில் இருந்து சென்றவர்களை மீண்டும் சுவிஸிற்கு வந்து சேர்வதற்கான பணி தொடர்ந்தும் நடந்து வருகின்றது. இன்று வரை 29 விமானப்பயணங்களினால் 3700 பேர் மீண்டும் சுவிஸிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். தற்பொழுது கூட கின்சாசா- கொங்கோவில் இருந்து ஓர் விமானம் வந்து கொண்டிருக்கின்றது. சுவிஸிலருந்து நிவாரண பொருட்கள் அனுப்பவும் மனிதாபிமான உதவியாளர்கள் செல்வதற்காக மட்டுமே ஆபிரிக்காவிற்கு இது வரை விமானங்கள் புறப்பட்டுள்ளன.”

“514 இராணுவத்தினர் மட்டுமே தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டிருப்பது நல்ல செய்தி.” என்று இறுதியாக பிறிகாடியர் றேய்னால்ட் டிறொட்ஸ் கூறியிருந்தார்.

இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை 400, திங்கள் 280 மற்றும் இன்று 254 என தொற்றேற்படுவது குறைந்து வருவது சுவிஸ் மக்களுக்கான நல்ல செய்தியாகும்.
மொழிபெயர்ப்பு:

ad

ad