புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

23 ஏப்., 2020

அதிதீவிர கொரொனா வலயமான கொழும்பிலிருந்து யாழிற்கு தப்பி வந்த 7 பேர்: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மாவட்ட செயலர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை இரவு நடத்திய அவசர ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
வலி.மேற்கு பிரதேச சபைக்கு உள்பட்ட சங்கானை, தொல்புரம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டத்தின் அபாய வலயங்களில் தங்கியிருந்த இவர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் குருநகர், பாசையூர், நாவற்குழி, தெல்லிப்பளை, தொல்புரம் மற்றும் சங்கானையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் விவரங்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு மாதகாலம் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு கொரோனா அச்சுறுத்தலிலிருந்து மீள்வதற்கு அனைவரும் வழங்கிய தியாகம் இந்த நபர்களால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் அடையாளம் காணப்பட்டால் தனிமைப்படுத்தல் நிலையத்தில் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உண்மையைக் கூறி உரிய வகையில் இங்கு வருகை தந்திருக்க முடியும். அவர்களால் சொந்தக் குடும்பத்தினருக்கும் அயலவர்களுக்கும் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.