புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2020

பலாலி அம்பலமானதால் கோத்தா சீற்றம்?

பலாலி தனிமைப்படுத்தல் மையம் தொடர்பில் ஊடகங்களிலும் சமூக ஊடகங்ளிலும் வெளியாகிய தகவல்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சீற்றமடைய வைத்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.

குறித்த அதிர்வுகளின் பிரதிபலிப்பாகவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்னவின் பலாலிக்கான விஜயம் அமைந்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவிஸ் போதகருடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தவர்கள் என்ற அடிப்படையில் பலாலியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைப்பட்டடிருந்த அரியாலை பிரதேசத்தினை சேர்ந்தவர்களுக்கு கொறோனா தொற்று ஏற்படுவதற்கு தனிமைப்படுத்தல் மையத்தின் பராமரிப்பு செயற்பாடுகளின் குறைபாடுகளே காரணம் என்ற குற்றச்சாட்டுக்கள் வெளியாகியிருந்தன.

அத்துடன், சந்தேக நபர்களை தனிமைப்படுத்தும் வகையில் தனிமைப்படுத்தல் மையத்தின் உள்ளக கட்டமைப்புக்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் புகைப்படங்களும் வெளியாகிய இருந்தன.

குறித்த தனிமைப்படுத்தல் மையம் இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் இருந்து வருகின்ற நிலையில் இராணுவத் தளபதி உட்பட சிலரினால் குறித்த குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்பட்டிருந்தன.

ஆனால் குறித்த விவகாரத்தில் நேரடிக் கவனம் செலுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் தொடர்பு கொண்டு குறித்த குற்றச்சாட்டுகளில் காணப்படும் உண்மைத் தன்மைகள் தொடர்பாக தன்னுடைய கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுன், 'ஏற்கனவே என்னை தமிழர்கள் ஏதோ விரோதியாகப் பார்க்கிறார்கள். இந்நிலையில் நீங்கள் பொறுப்பற்ற விதமாக மேற்கொள்கின்ற வேலைகள் ஏதோ நான் திட்டம்மிட்டு செய்வது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தப் போகின்றது' என்று தெரிவித்த ஜனாதிபதி உடனடி நடவடிக்கைக்கும் உத்தரவிட்டதாக தெரிகிறது.

இதன் தொடர்ச்சியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பலாலிக்கு நேரடியாக விஜயம் செய்த நிலையில் தற்போது பலாலி தனிமைப்படுத்தல் மையத்தின் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாவும் யாழ். சுகாதார வைத்திய அதிகாரிகள் போன்றோர் நேரடியாக விஜயம் மேற்கொண்டு நிலமைகளை அவதானிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

ad

ad