23 ஏப்., 2020

ஸ்ரீலங்கா முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் ஊரடங்குச் சட்டம்

எதிர்வரும் 24 ஆம் திகதி இரவு 8 மணிக்கு தற்போது தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுலுக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச்சட்டமானது 27 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் பிரிவுகளை தவர்ந்த பகுதிகளில் அதிகாலை 05 மணி தொடக்கம் இரவு எட்டு மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு , கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.