பரிஸ் புறநகரில் நேற்று நள்ளிரவு மீண்டும் கலவரம் இடம்பெற்றுள்ளது. 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதானமாக Hauts-de-Seine மாவட்டத்தில் இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக Champigny-sur-Marne நகர காவல்நிலையம் தாக்கப்பட்டது. ஆனால் அதன்போது எவரும் காயமடையவில்லை. Gennevilliers நகரில் கலவரம் தொடர்ந்தது. அங்கு கைகளால் தயாரிக்கப்பட்ட வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
Villeneuve-la-Garenne நகரில் உந்துருளி விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்திருந்தார். காவல்துறையினர் துரத்திச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, பலர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
சனிக்கிழமை இரவில் இருந்து தினமும் நள்ளிரவில் வன்முறை பதிவாகி வருகின்றது. செவ்வாய்க்கிழமை இரவு 11 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 13 பேர் கைதாகியிருந்தனர்.