புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

23 ஏப்., 2020

வடகொரியா அதிபர் நிலை மோசம் அவரிடத்து தங்கை பதவி ஏற்கவுள்ளாரா ? பொறுப்பை கையில் எடுக்க தயாராகும் கிம் தங்கை

அண்ணனுக்கு உடம்பு சரியில்லை பொறுப்பை கையில் எடுக்க தயாராகும் கிம் தங்கை
வடகொரியாவில் கிம் ஜங் உன்னிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல்களை அடுத்து அவரது இடத்தில் அவரது தங்கை கிம் யோ ஜங் அமர்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகொரிய அதிபர் ஜிம் ஜங் உன்னின் உடல்நிலை மோசமாக இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. அவர் வழக்கமாக அவரது தாத்தாவின் பிறந்தநாள் விழாவிற்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை அவர் அந்த விழாவில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில்தான், அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அமெரிக்கத் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த தகவல்களை வடகொரிய அரசு உறுதிப்படுத்தவில்லை.

அதிபரின் உடல்நிலை குறித்த தகவல்கள் காட்டுத் தீ போல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அவரது இளைய சகோதரி கிம் யோ ஜங் (31) அந்த நாட்டில் மாபெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறார்.

இவருக்கு அண்ணனிடம் இருக்கும் பண்புகள் அப்படியே இருப்பதாக அந்நாட்டு அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சகோதரர் கிம் ஜங் உன் எடுத்த கடுமையான முடிவுகளில் கிம் யோவின் பங்களிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கிம் யோ வடகொரியாவின் முக்கியமான தலைவராக கருதப்படுகிறார். கிம் யோ ஜங் முக்கியமான நபராக உருவெடுத்து வருவது அந்நாட்டினரை ஒன்றும் ஆச்சரியப்படுத்தவில்லை.

ஏனெனில் கடந்த மாதம் ராணுவ பயிற்சியின் போது பயம் கொண்ட நாய் குரைக்கத்தான் செய்யும் என தென்கொரியா கிம் யோ ஜங் கடுமையாக விமர்சனம் செய்ததை அனைவரும் அறிந்ததே.

இதுகுறித்து ஆய்வாளர் யங்ஷிக் பாங் கூறுகையில் தென் கொரியாவுக்கு எதிராக அத்தகைய கடுமையான கருத்தை முன்வைக்க தங்கைக்கு அனுமதி கொடுத்ததே அண்ணன் கிம் ஜங் உன்தான்.

அவருக்கு மாற்றாக தங்கை கிம் யோ ஜங் வளர்ச்சியை அவர் அனுமதித்துள்ளார். 31 வயதாகும் கிம் யோ மிகவும் புத்திசாலி. அனைத்தையும் வேகமாக கற்றுக் கொள்வார். அனேகமாக அவரது அண்ணனின் உடல்நிலை குறித்த கேள்விகள் தொடர்பாக அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் எதிர்பார்க்கிறார்கள் என்றார்.

அது போல் வடகொரிய நாட்டின் மூத்த பேராசிரியர் லியோனிட் பெட்ரோவ் கூறுகையில் கிம் ஜங் உன்னை நேரடியாக அணுகுவதற்கு அவருக்கு செல்வாக்கு உள்ளது. ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுடன் கிம் யோவுக்கு நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் அவருக்கு அனைத்தும் தெரியும். இவர் ஒரு நம்பகமான அரசியல்வாதியாவார். தென் கொரியர்கர் மற்றும் வெளிநாட்டினர் மத்தியில் அண்ணனின் நேர்மறையான பிம்பத்தை பாதுகாக்க உதவியவர் இவர்தான் என்றார்.

கிம் ஜங் உன்னைவிட 4 ஆண்டுகள் இளையவரான இவர் தனது சகோதரருடன் சேர்ந்து சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்றனர். உன்னுக்கு மிகவும் நெருங்கியவர். இவர் வடகொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சியின் பிரசாரத் துறையின் இணை இயக்குநராக உள்ளார். இவர் பிரசாரத் துறையில் மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் மக்களின் கவனத்தை பெற்றுள்ளார். எனவே வடகொரியாவில் பதவியில் இவர் அமருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.