23 ஏப்., 2020

வடகொரியாவின் அடுத்த தலைவர் யார்? மர்ம தேசத்தின் அதிபருக்கு நடந்தது என்ன?

காலா காலமாக மர்மதேசமாக விளங்கிக் கொண்டிருக்கும் வட கொரியாவின் அரச தலைவருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதும் மர்மமாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக இணையங்கள் செய்தி வெளியிட மீண்டும் பரபரப்பானது உலக நாடுகள்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பல நாடுகள் திணறிக் கொண்டிருக்கையில் வடகொரியா மட்டும் அணு சோதனைகளை நடத்திக் கொண்டிருந்தது உலக பல நாடுகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இந்த நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வெளியாகி உள்ளன. அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பிறகு அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்திருப்பதாகவும் அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன